கார்த்திக் சர்மாவிடம் அதீத திறமை இருக்கு.. அப்படியே என்னை பார்ப்பது போலவே உணர்ந்தேன்.. பிரெவிஸ்!
சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து ஃபிளமிங் மற்றும் சென்னை அணி நிர்வாகத்தில் இருந்து அழைப்பு வந்த போது எனக்கு முடிவு எடுப்பதற்கு எளிதாக இருந்ததாக நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவரும் திறமைசாலிகள் என்று கூறிய பிரெவிஸ், 2 ஆண்டுகளுக்கு முன் என்னை பார்ப்பதை போலவே அவர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இருந்தாலும் சிஎஸ்கே அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அடுத்தப் போட்டிக்கும் கூட உச்சத்திலேயே இருக்கிறது. அதற்கு காரணம் இளம் நட்சத்திர வீரரான டிவால்ட் பிரெவிஸ் தான். ஏனென்றால் டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்குள் வந்தால், மிடில் ஆர்டர் கூடுதல் வலிமை பெறும்.

அதேபோல் ஆட்டத்தை ஒரே வீரராக மாற்றக் கூடிய வல்லமை பெற்றவர் டிவால்ட் பிரெவிஸ். காயத்தில் இருந்து குணமடைந்துவிட்ட டிவால்ட் பிரெவிஸ், டெல்லி அணிக்கு எதிரான அடுத்தப் போட்டியில் களமிறங்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. அதற்கேற்ப அஸ்வினின் யூடியூப் சேனலில் டிவால்ட் பிரெவிஸ் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் டிவால்ட் பிரெவிஸ் பேசுகையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தது. ஆனால் ஃபிளமிங் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்ததை ஒரு ஆசீர்வாதமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் எளிதாக எடுத்த சரியான முடிவு என்று கருதுகிறேன். இதுவரை சிஎஸ்கே அணி எனக்கு நல்லதை மட்டுமே செய்திருக்கிறது.
அதேபோல் கடந்த எஸ்ஏ20 லீக் தொடரில் கங்குலியுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. அப்போது கங்குலி என்னிடம் 20வது ஓவர் வரை களத்தில் நிற்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பார். முதலில் அது எனக்கு புரியவில்லை. ஆனால் களத்தில் நிற்கும் போது கடைசி 4 ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது எளிதாக இருந்தது. நாம் எவ்வளவு நேரம் களத்தில் ஆடுகிறோமோ, அவ்வளவு வேகமாக கிரிக்கெட்டை புரிந்து கொள்ள முடியும்.
திலக் வர்மா எனக்கு சிறந்த நண்பன். தென்னாப்பிரிக்கா வந்த போது என்னுடைய வீட்டிற்கு வந்தார். மும்பை அணியில் ஒரு சூப்பர் ஸ்டார் வீரராக உருவாகிவிட்டார். அதேபோல் சிஎஸ்கே அணியிலும் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது 2 ஆண்டுகளுக்கு முன் என்னை பார்ப்பது போலவே இருக்கிறது என்று தெரிவ்த்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications