செமி பைனலுக்கு முன் பிட்சை மாற்றிய பிசிசிஐ.. விவாதத்திற்கு உள்ளான அந்த ஐசிசி விதி! இதுதான் முக்கியம்
சென்னை: 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் போட்டிக்கு முன்பே பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இன்று நடக்கும் ஆட்டம் , ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச்சில் விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிசிசிஐயின் இந்த முடிவு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று நடக்க உள்ள அரையிறுதியானது வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் பிளாக்கின் மையப் பகுதியான பிட்ச் 7 இல் விளையாடப்பட வேண்டும் என்று முதலில் கருதப்பட்டது. பிட்ச் 7 என்பது உலகக் கோப்பையின் லீக் கட்டத்தில் பயன்படுத்தப்படாத புதிய பிட்ச் ஆகும்.

லீக் ஆட்டம் ஆடவில்லை; இதில் எந்த லீக் ஆட்டமும் ஆடப்படவில்லை. ஆனால் ஆட்டத்தை திடீரென பிட்ச் 6 க்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த பிட்ச் சற்று மையமாக உள்ளது என்பதால் இது தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம் போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச் ஆகும் இது.
அக்டோபர் 21 அன்று இங்கிலாந்தை தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 2 அன்று இலங்கைக்கு எதிராக இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகள் இங்கே ஏற்கனவே நடந்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இந்த பிட்ச் இருக்கும். முக்கியமாக மிகப்பெரிய அளவில் இந்த பிட்ச் சாதகமாக இருக்கும்.
இங்குதான் ஆட்டம் மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் பிட்ச் ரொட்டேஷன்தான். 6-8-6-8-7 என்ற பிட்ச் ரொட்டேஷன்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிசிசிஐ விதிப்படி 6-8-6-8-6 ரொட்டேஷன் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஆட்டத்தை திடீரென பிட்ச் 6 க்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. புதிய ரொட்டேஷனில்தான் 7வது பிட்ச் தேர்வு செய்யப்படும்.
அது உலகக் கோப்பையில் ஆடப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு போட்டிக்கும் முன், "ஆடுகளத்தை தேர்வு செய்வதற்கும் தயாரிப்பதற்கும்" அந்த கிரவுண்டுடன் தொடர்பு கொண்ட 'கிரவுண்ட் அதிகாரி'தான் எல்லா முடிவையும் எடுப்பார் என்று ஐசிசி விதி சொல்கிறது. இதில் ஐசிசி, பிசிசிஐ தலையிட முடியாது. மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA)தான் இதில் எல்லா முடிவையும் எடுக்கும்.
ஐசிசியில் ஒரு இண்டிபெண்டண்ட் பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் உள்ளார். அவரும் இந்த பிட்சை ஆலோசனை செய்வார். இவருக்குத்தான் பிட்ச் மாற்றப்பட்டது பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஐசிசி விதி என்ன சொல்கிறது: இந்த விவகாரத்தில் ஐசிசி விதி என்ன சொல்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆடுகளங்களில்தான் நாக் அவுட் போட்டிகளை விளையாட வேண்டும் என்று ஐசிசியின் எந்த நிபந்தனையும் இல்லை.
பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் தொடர்பாக ஐசிசி ஒரே விதியை சொல்கிறது. ஒரு போட்டியை நடத்தும் மைதானங்கள் அந்த போட்டிக்கான சிறந்த பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்டை கொண்டிருக்க வேண்டும். மற்றபடி புதிய பிட்ச்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஐசிசி விதி கூறுகிறது. இதனால் இன்றைய போட்டியில் பிட்ச் மாற்றப்பட்டு இருந்தாலும் கூட.. அதில் தவறு இல்லை என்பதே ஐசிசி விதி .
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications