மேக்ஸ்வெலின் முறிந்த கால்.. பாட்டாகவே பாடிய கவிஞர்! “நீங்களும் அப்படிதான்” - நெகிழ வைத்த திமுக எம்பி
சென்னை: காயமடைந்த கால்களுடன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனி ஆளாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்த மேக்ஸ்வெல் பற்றி எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சிலாகித்து எழுதிய பேஸ்புக் பதிவின் கீழே திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா போட்ட கமெண்ட் பலரை நெகிழ வைத்து இருக்கிறது.
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2 வதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்த நிலையில், மேக்ஸ்வெல் மட்டும் தனி ஒருவனாக நின்று 201 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தார். மேக்ஸ்வெல்லின் இந்த அசாத்திய பேட்டிங்கை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் சிலாகித்து ஒரு பதிவை எழுதினார்.

அதில், "எவ்வளவோ வருடங்களாக கிரிக்கெட் பார்க்கிறேன். மேக்ஸ்வெல் இன்று ஆடிய ஆட்டத்தைபோல ஒன்றை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தசைப்பிடிப்பில் காலை அசைக்க முடியாமல் கையின் பலத்தால் மட்டுமே 200 ரன்கள் அடிப்பது எல்லாம் மேஜிக். கதையில் கற்பனையாய் எழுதினால் கூட யாரும் நம்பமாட்டார்கள். 70 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா தனி ஒருவனால் இப்படி ஒரு வெற்றியை யாரால் செய்ய முடியும்?
மேக்ஸ்வெல்லை ஒரு கேட்ச் தவறவிட்டதால் ஆப்கானிஸ்தான் அதன் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத காயத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் மேக்ஸ்வெல் என்றென்றும் நினைவில் நிற்கும் hero of our time ஆகிவிட்டார். கிரிக்கெட்டை தாண்டி ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் எந்த நிலையிலும் போராடுவதற்கான ஒரு மன எழுச்சியை இன்று மேக்ஸ்வெல் தந்திருக்கிறார். சல்யூட். எனக்கு உண்மை மனிதனின் கதை நாவல் நினைவுக்கு வருகிறது. மன உறுதிக்கும் போராடும் குணத்திற்கும் வானமே எல்லை." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பலர் கருத்திட்ட நிலையில், திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா வெளியிட்ட கமெண்ட் எழுத்தாளர் உட்பட பலரை நெகிழ வைத்து இருக்கும். அதில், "நீங்க மட்டும் என்ன.. கைகளின் பலத்தால் மட்டும்தானே கவிதை செஞ்சுரி அடிச்சிட்டு இருக்கீங்க" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை கவிதையாகவே கொட்டிவிட்டார் மனுஷ்யபுத்திரன். அதில்,
"மேக்ஸ்வெல் முறிந்த காலுடன் 200 ரன்கள் அடித்த இரவு
மேக்ஸ் வெல்
ஒற்றைக் காலில்
நடமாடுகிறான்
மீதி உடல் முழுக்க
வலியால் நடுங்க
ஒற்றைக்கால் மட்டும்
பணிய மறுக்கிறது
இருபத்திரெண்டு கால்கள்
அந்த நடனத்தை
வெல்ல முயல்கின்றன
அந்த ஒற்றைக் கால்
புயலில் ஒரு மரம்போல
தலைவிரித்தாடுகிறது
நிற்க முடியாமல்
மல்லாந்து விழுகிறான்
ஆகாயத்தில் நட்சத்திரங்கள்
'எழுந்துகொள் எழுந்துகொள்' என
உத்தரவிடுகின்றன
மேக்ஸ்வெல்
எழுந்துகொள்கின்றான்
ஒன்றைக்காலும்
இப்போது இணங்க மறுக்கிறது
அவன் கைகளில்
மின்னல்கள் தோன்றுகின்றன
எட்டுத் திக்கும் அவை ஒளிர்ந்து
இடியோசைகள் கேட்கின்றன
போர்க்களத்தில்
ஒரு கடைசிவீரன்
உடைந்த காலுடன்
ஒரு கடைசிக் குதிரை
அவன் வெல்வதென்று முடிவு செய்கிறான்
அவ்வாறே வெல்கிறான்
நாயகர்கள்
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்கள்
களத்தைவிட்டு கெந்திக் கெந்தி
வெளியேறும்போது
என் 'தோளைப் பிடித்துக்கொள்' என
சரித்திரம் அவனை அணைத்துக்கொள்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications