Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாக் அவுட் வந்தாலே நாக்கு அவுட் ஆகும் இந்திய அணி! தோனியை இந்த ரோலில் கொண்டு வாங்க.. பறக்கும் மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்திய அணி ரசிகர்கள் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2023 உலகக் கோப்பை பைனல் நேற்று முதல் நாள் விறுவிறுப்பாக நடந்தது. நேற்று முதல் நாள் தொடக்கத்தில் பெரிய நம்பிக்கையோடு இந்திய அணி களமிறங்கியது. வரிசையாக 10 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்றது.

Fans want BCCI to appoint as the coach for team India as it lost the 2023 World Cup Finals against Australia

இந்த வெற்றி காரணமாக உலகக் கோப்பை பைனல் போட்டியிலும் கூட நேற்று இந்தியா வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய அணி திணறியது. ரோஹித் சர்மா 47 ரன்களில் அவுட் ஆன பின் ஆஸ்திரேலிய அணி பவுலிங்கில் அதிரடி காட்டியது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வீரர்கள் 240 ரன்களுக்கு சுருண்டனர். 50 ஓவரில் இந்தியா 240 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் இலக்கை அடைந்து எளிதாக வென்றது. டிராவிஸ் ஹெட் முக்கியமாக 137 ரன்களை எடுத்தார்.

பாட் கம்மின்ஸ் ஆட்டம்: நேற்று பாட் கம்மின்ஸ் முறையாக திட்டமிட்டு ஆடினார். முக்கியமாக ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திட்டமிட்டும் விக்கெட்டுகளை எடுத்தனர். கோலிக்கு பீல்டிங் செட்டப் செய்து பிரஷர் போட்டு அவரை போல்ட் செய்தார். அதேபோல் ஒவ்வொரு வீரருக்கும் கம்மின்ஸ் சிறப்பாக பிளான் போட்டார்.

பவுலிங் ரொட்டிஷன் தொடங்கி பீல்டிங் செட்டப் வரை எல்லாமே சிறப்பாக கம்மின்ஸ் செய்தார். அவரின் சிறப்பான கேப்டன்சி காரணமாக.. ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.

தோல்வி மேல் தோல்வி; இந்திய அணி சரியாக 2011ல் தோனி உலகக் கோப்பையை வென்ற பின் ஒரு ஐசிசி தொடரில் கூட செமி பைனல் அல்லது பைனல் போட்டிகளில் இந்தியா வென்றதே இல்லை. ஒன்று செமி பைனல் வரை சென்று இந்தியா தோல்வி அடையும்.

அல்லது பைனல் வரை சென்று இந்தியா தோல்வி அடையும். லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடும் இந்திய அணிக்கு செமி பைனல், பைனல் என்று வந்தால் கால் நடுக்கம் ஒன்று வந்துவிடுகிறது. எப்படி ஆடுவது என்று தெரியாத அச்சம் வந்துவிடுகிறது. 100 கோடி மக்கள் நம்மை பார்க்கிறார்கள் என்ற பயம் வந்துவிடுகிறது. தோனி இருந்த சமயத்தில் இந்த விஷயம் இல்லை.

அப்போதெல்லாம் தோனி எப்படியும் பைனல் வந்தால் கோப்பையை வென்றுவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது இல்லை. இப்போது அது பயமாக மாறிவிட்டது.

ரசிகர்கள் கோரிக்கை: இந்த நிலையில்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக தோனியை நியமிக்க வேண்டும் அல்லது நெஹ்ராவை நியமிக்க வேண்டும் . இரண்டு பேருமே நன்றாக பயிற்சி அளிப்பார்கள். அணி ஆடும் விதத்தை மாற்ற கூடியவர்கள்.

முக்கியமாக அணிக்கு தேவையான நேரத்தில் வியூகங்களை மாற்றி தன்னம்பிக்கை கொடுக்க கூடியவர்கள். அதனால் அவரை அணியின் பயிற்சியாளராக அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+