கடைசியாக மௌனம் கலைத்த தனஸ்ரீ.. சாஹல் உடல் விவாகரத்து? உண்மையில் என்ன நடந்தது? பரபர போஸ்ட்
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலிடம் இருந்து அவரின் மனைவி தனஸ்ரீ விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் தொடர்பாக இத்தனை நாட்களாக வாய் திறக்காமல் இருந்த தனஸ்ரீ மௌனம் கலைத்துள்ளார்.
தனஸ்ரீ செய்துள்ள போஸ்டில், கடந்த சில நாட்கள் என் குடும்பத்திற்கும் எனக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆதாரமற்ற வகையில் எனக்கு எதிராக போஸ்ட் செய்கின்றனர்.

உண்மையை சரிபார்க்காமல் பொய்யை பரப்புகின்றனர். வெறுப்பைப் பரப்பும் வகையில் பொய்யாக இணையத்தில் ட்ரோல்களை செய்கின்றனர். எனது நற்பெயரை கொலை செய்து.. இணையத்தில் போஸ்டுகளை செய்கின்றனர்.
என்னுடைய தொழிலை.. என்னுடைய வேலைகளை நான் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கினேன். என் கடின உழைப்பு மூலம் இந்த பெயரை பெற்றுள்ளேன். இந்த பெயரை உடைக்க முடியாது. நான் அமைதியாக இருப்பது என் பலவீனத்தின் அடையாளம் அல்ல.. ஆனால் அது வலிமையின் அடையாளம். எனக்கு எதிராக ஆன்லைனில் பரவும் பொய்யான புகார்களுக்கு நான் பதில் அளிக்க போவது இல்லை.
நான் உண்மையின் பக்கம் இருப்பேன். என்னுடைய முன்னேற்றத்தில் நான் கவனம் செலுத்துவேன், என்று தனஸ்ரீ குறிப்பிட்டு உள்ளார்.
சாஹல் தனஸ்ரீ விவாகரத்து:
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தனஸ்ரீ வர்மா தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படம்தான் சாஹல் - தனஸ்ரீ வர்மா இடையிலான விவாகரத்திற்கு முக்கியமான காரணமாக மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனஸ்ரீ வர்மா குறித்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நடன இயக்குனர் பிரதிக் உடேகருடன் தனஸ்ரீ இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
படத்தில் இருவரும் ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து உள்ளனர். இருவரும் இரவு பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளனர். கட்டி அணைத்தபடி இருவரும் புகைப்படம் எடுத்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
பிரதிக் உடேகர் யார்?:
மும்பையைச் சேர்ந்த பிரதிக் உடேகர், டான்ஸ் மாஸ்டர் ஆவார். இவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர்.
சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித் மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பாலிவுட்டின் பல பிரபலங்களுடன் பணிகளை செய்துள்ளார். டிவி சேனல்களில் மிகவும் பிரபலமாக இருக்க கூடியவர். கரண் ஜோஹர் மற்றும் மௌனி ராய் போன்ற நன்கு அறியப்பட்ட நபர்களுக்கு இவர் நெருக்கம்.
அவருடன் சேர்ந்துதான் தனஸ்ரீ வர்மா பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே டான்ஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில்தான் இவர்களுக்கு இடையிலான நெருக்கம் தனஸ்ரீ வர்மா- சாஹல் பிரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.அதன்படி சாஹல் - தனஸ்ரீ இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.
நேற்று சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவாகரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications