உலக கோப்பை கிரிக்கெட் பைனல்: அகமதாபாத்தில் பிரதமர் மோடி, முதல்வர்கள், வெளிநாட்டு ’தலை’கள் முற்றுகை!
அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியை காண மாநிலங்களின் பிரதமர் மோடி, முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அகமதாபாத்தில் மொத்தம் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதனையொட்டி அகமதாபாத் நகரே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

பிரமுகர்கள் படையெடுப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் அமைச்சர்கள், அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் அகமதாபாத்தில் குவிந்துள்ளனர்.
6,000 போலீசார் பாதுகாப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதபாத் மைதானத்தில் 1.25 லட்சம் ரசிகர்கள் அமர முடியும். கிரிக்கெட் ரசிகர்களை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு பணியிலும் சுமார் 6,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"Step up to the crease of safety with Gujarat Police!"
— Gujarat Police (@GujaratPolice) November 18, 2023
As the world gears up for the Cricket #WorldCup in #Ahmedabad, Gujarat Police is your steadfast fielders of security.
Let's make this final a sixer of safety together! #INDvsAUS #WorldcupFinal pic.twitter.com/PTKoLZH6lT
விமான படை சாகசம்: மேலும் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இன்று பகல் 12 மணிக்கு இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்திய விமானப் படையின் சூர்ய கிரண் குழுவின் 9 விமானங்கள் அகமதாபாத் மைதானத்துக்கு மேல் 10 நிமிடங்கள் வான்பரப்பில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய விமானப் படை சாகசம் முதல் முறையாக நடைபெற உள்ளது.
#WATCH | Gujarat: Security stepped up at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCWorldCup2023 pic.twitter.com/RxrMieuQwm
— ANI (@ANI) November 18, 2023
500 நடன கலைஞர்கள்: மேலும் முதல் இன்னிங்ஸ் முடிவடையும் போது உலகக் கோப்பை கிரிக்கெட் முன்னாள் சாம்பியன்கள் சிறப்பிக்கப்படுவர். 15 நிமிடம் இந்த நிகழ்வு நடைபெறும். மேலும் இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் 500 நடன கலைஞர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Air Show Rehearsal ✈️@cricketworldcup @BCCI @sanghaviharsh @GujaratPolice @GCAMotera pic.twitter.com/gIxYraWcSC
— Ahmedabad Police અમદાવાદ પોલીસ (@AhmedabadPolice) November 17, 2023
1200 டிரோன்கள்: 2-வது இன்னிங்ஸில் 2-வது குடிநீர் இடைவேளையின் போது 90 நிமிடங்களுக்கு லேசர் ஷோ நிகழ்ச்சி நடத்தப்படும். இறுதிப் போட்டியின் கடைசி பந்து வீசும் போது, வெற்றி பெறும் அணி கோப்பையை பெறும் போது வானில் 1,200 டிரோன்கள் பறந்து வண்ண விளக்குகளை பாய்ச்சும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் ரசிகர்களை வரவேற்க கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications