கேப்டன்சியில் இருந்து ஹர்திக் நீக்கம்? ஆகாஷ் அம்பானி எடுக்கும் முடிவு.. அடுத்த கேப்டன் யார்?
மும்பை: மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்படுவதற்கான சூழல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடைசியாக மும்பை அணி 2020ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் ஆடியுள்ள 6 சீசன்களாக மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஹர்திக் பாண்டியா 3வது சீசனாக கேப்டன்சியை மேற்கொண்டுள்ள போதும், மும்பை அணி தடுமாறி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சில சீசன்கள் மிகவும் சவாலானதாக அமைந்துள்ளன. குறிப்பாக, ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த மும்பை அணி நிர்வாகத்தின் முடிவு இன்றுவரை ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள அந்த அணி, பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களைக் குவித்தும், பந்துவீச்சில் சொதப்பி தோல்வியடைந்தது மும்பை நிர்வாகத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
போட்டியின் போது டக்-அவுட்டில் இருந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, மிகவும் கோபமாகவும் விரக்தியாகவும் காணப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த சீசனுக்கும் ஹர்திக்கைத் தான் கேப்டனாக வைத்திருக்கப் போகிறதா என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும்.
இல்லையெனில் அவரை விடுவித்துவிட்டு, புதிய கேப்டனைத் தேடுவதுதான் அந்த அணிக்கு நல்லது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி முறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 2024, 2025 மற்றும் 2026 சீசன்களில் ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் மும்பை அணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால் 2027 மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கேப்டன் பதவியில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய ஆகாஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஹர்திக் பாண்டியா அணியில் ஒரு வீரராகத் தொடர்வாரா அல்லது முழுமையாக விடுவிக்கப்படுவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications