ஹர்திக் பாண்டியா குடும்பத்தில் பிளவு.. சகோதரர் க்ருணாலுடன் மோதல்! பிரச்சனைக்கு மஹிகா சர்மாவே காரணம்
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மா உடனான உறவே இவர்களின் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு ஹர்திக்கை வாழ்த்தி ஒரு பதிவை கூட க்ருணால் பாண்டியா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின் அகமதாபாத் மைதானத்தில் தனது புதிய காதலியான மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா உற்சாகமாக கொண்டாடினார். ஒரு கட்டத்தில் கொண்டாட்ட அரங்கிலேயே மஹிகா சர்மாவுடன் படுத்து ரொமான்ஸ் செய்தார்.

அதேபோல் மைதானத்திலேயே மஹிகா சர்மாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். இது ஒரு சர்ச்சையாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில், ஹர்திக் பாண்டியாவின் குடும்பத்திலும் பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியாவுக்கும், அவரது அண்ணனான க்ருணால் பாண்டியாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மஹிகா சர்மா முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் இதற்கு முன் ஹர்திக் பாண்டியா எந்தவொரு வெற்றியை பெற்றாலும், அவரின் சகோதரரான க்ருணால் பாண்டியாவிடம் இருந்துதான் முதலில் வரும். அதேபோல் எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் ஹர்திக் பாண்டியா நேராக தனது சகோதரர் க்ருணால் பாண்டியா மற்றும் அவரின் மனைவி பன்கூரி ஆகியோருடனும், அவர்களின் குழந்தைகளுடன் தான் கொண்டாடுவார்.
ஆனால் கடந்த 6 மாதங்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா இடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. இதற்கு மஹிகா சர்மா உடனான உறவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா உடன் விவாகரத்து நடந்திருந்தாலும் நடாஷா ஸ்டான்கோவிக் உடனும், மகன் அகஸ்தியா உடனும் க்ருணால் பாண்டியாவின் குடும்பத்தினர் நட்புடன் இருக்கின்றனர்.
இத்தனைக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற போதும் கூட ஹர்திக் பாண்டியா ஒரு வாழ்த்து பதிவை கூட ஹர்திக் பாண்டியாவுக்காக வெளியிடவில்லை. அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் பதிவுகளை க்ருணால் பாண்டியாவும், க்ருணால் பாண்டியாவின் பதிவுகளை ஹர்திக்கும் லைக் செய்வதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. க்ருணால் பாண்டியா வசித்து வரும் அகமதாபாத் மண்ணில் தான் இறுதிப் போட்டி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications