இதுவரை நடந்ததை விடுங்க.. இனிமேல்தான் ஹர்திக் பாண்டியாவிற்கு இருக்கு பெரிய சிக்கல்.. என்ன செய்வாரோ?
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர்ந்து மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் வரிசையாக இரண்டு போட்டியில் மும்பை தோல்வி அடைந்தது ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக மாறி உள்ளது.
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி படுதோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 277/3 ரன்களை எடுத்து ஹைதராபாத் அணி சாதனை படைத்துள்ளது . அதன்பின் இறங்கிய மும்பை அணி 246/5 ரன்கள் வரை எடுத்து வேகமாக அடித்து முன்னேறியது.

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் மோசமான பேட்டிங்கும் மும்பை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 20 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே அவர் எடுத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
அவரின் கேப்டன்சி சொதப்பல் , ஓவர் ரொட்டேஷனில் அவர் நடந்து எடுத்த முடிவுகளும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது .
சொதப்பல் மேல் சொதப்பல்; ஒன் பேமிலி என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி.. உண்மையில் ஒரு பேமிலி இல்லை அது பல பேமிலி என்பது நேற்று நடந்த மேட்சில் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. மாயாண்டி குடும்பத்தாராக ஒன்றாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாண்டியா மீண்டும் வந்ததில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே ரோஹித் சர்மாவை பவுண்டரி அருகே பீல்டிங் நிற்க வைத்தது, இங்கும் அங்கும் அவரை அலைய விட்டது, ரோஹித் சர்மா, பும்ரா இருவரும் பாண்டியாவின் பீல்டிங் செட்டப்பை விமர்சனம் செய்தது, மேட்சுக்கு பின் ஹர்திக் பாண்டியாவை அழைத்து ரோஹித் சர்மா கோபமாக அறிவுரை வழங்கியது இரண்டு மேட்சில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த எல்லா பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அதற்கு முன்பே கேப்டன்சி மாற்றம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கூட ஹர்திக் பாண்டியா பதில் அளிக்காமல் போனது பிரச்னையை பெரிதாக்கியது.
பிரச்சனை எப்போது தொடங்கியது; மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரான்ஸ்பரில் வாங்கியதில் இருந்துதான் பிரச்சனை தொடங்கியது. ஒரு சீசனில் பைனலில் சாம்பியன்ஸ், அடுத்த சீசனிலேயே பைனல்ஸ் ரன்னர் அப் என்று குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிரூபித்த காரணத்தால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய் கொடுத்து அணியில் எடுத்தது.
15 கோடி ரூபாய் + விளம்பர தொகை + கூடுதலாக இன்னும் பல கோடிகளை கொடுத்து ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் எடுத்தது. இதில் ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்கள் கேப்டனாக நிரூபித்த காரணத்தால்.. வெறும் வீரராக அணிக்குள் திரும்ப தயாராக இல்லை. கேப்டனாக மட்டுமே அணிக்குள் வருவேன் என்று அவர் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி.. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் ரோஹித் சர்மாவை கேப்டனாக வைத்திருக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் வேறு சில காரணங்களுக்காக ரோஹித் சர்மாவை நீக்கலாம் என்ற திட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது.
ரசிகர்கள்: ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அஹமதாபாத் மைதானத்தில் ஹர்திக் பாண்டியனை ஊ ஊ என்று கூறி கிண்டல் செய்தனர். நேற்று ஹைதராபாத் மேட்சிலும் அது நடந்தது. அடுத்து ஏப்ரல் 1ம் தேதி மும்பையில் நடக்க உள்ள ஆட்டத்தில்தான் உண்மையில் ஹர்திக் பாண்டியா பெரிய சிக்கலை எதிர்கொள்ள போகிறார்.
அங்கே ஹோம் கிரவுண்ட் ரசிகர்களுக்கு முன்னிலையில் ஹர்திக் பாண்டியா என்ன நிலைமைக்கு ஆளாவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications