Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டிலேயே வைத்து செதுக்கி.. ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய அபிஷேக்.. யார் இவருன்னு நினைவு இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை; இந்திய அணியில் புதிய பினிஷர் அவதாரம் எடுத்துள்ள ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றியது அபிஷேக் நய்யார் என்ற பயிற்சியாளர்தான்.

இந்திய அணியில் தோனிக்கு பின் பினிஷராக இருந்தவர் தினேஷ் கார்த்திக். அந்த தினேஷ் கார்த்திக் பார்மை இழந்து மீண்டும் அணிக்குள் வர முக்கிய காரணம் அபிஷேக் நய்யார் என்பவர்தான். அபிஷேக் என்ற மும்பையை சேர்ந்த பயிற்சியாளர்தான் இவருக்கு புதிய விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐபிஎல், ஒருநாள் என எந்த போட்டியிலும் சரியாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் தினேஷ் தன்னுடைய விளையாட்டு முறையை மாற்றியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் வாழ்க்கை: அதற்கு அபிஷேக் பெரிய அளவில் உழைத்துள்ளார். 'டங்கல்' படத்தில் வருவது போல தினேஷ் கார்த்திக்கை புதிய பயிற்சி முறைகளால் கொடுமைப்படுத்தியுள்ளார்.

How did Abhishek Nayyar Change the life of Rinku Singh with his techniques?

அபிஷேக் அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் சிறிய குடிசை போன்ற வீட்டில்தான் தினேஷ் கார்த்திக்கை தங்க வைத்துள்ளார். பயிற்சி கொடுக்கும் சமயங்களில் எல்லாம் அந்த வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் இனி உனக்கு இதுதான் வீடு என்று அங்கேயே அடைத்து வைத்துள்ளார்.

பயிற்சி நாட்கள் முழுவதும் அதிகாலையிலேயே எழுப்பி பயிற்சி செய்ய அழைத்து சென்று விடுவார். மும்பையில் சிறப்பாக செயல்படும் மூன்று பயிற்சியாளர்களிடம் மாற்றி மாற்றி நாள் முழுக்க தினேஷ் கார்த்திக்கை பயிற்சி பெற வைத்துள்ளார். மதியம் மட்டுமே 3 பயிற்சி சுற்றுகள் நடக்கும் என்று கூறியுள்ளார். உலகில் யாருமே இப்படி பயிற்சி செய்தது இல்லை என்றுள்ளார்.

ஆட்டம் அப்படியே மாறியது: இந்த பயிற்சியை அபிஷேக், தினேஷ் கார்த்திக்குக்கு ஒருநாள் இரண்டு நாள் கொடுக்கவில்லை. மொத்தம் 3 வருடம் இப்படி பயிற்சி கொடுத்துள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் விட மாட்டேன் என்று குறிக்கோளுடன் தினேஷ் கார்த்திக்கும் இப்படிப்பட்ட பயிற்சியில் இறங்கி இருக்கிறார். 2014ல் பயிற்சி தொடங்கி இருக்கிறது. இதற்காக 'விஷுவலைசேஷன்' என்னும் புதிய பேட்டிங் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

How did Abhishek Nayyar Change the life of Rinku Singh with his techniques?

பந்தை பார்க்காமல், பவுலரின் கை அசைவை வைத்து அது எவ்வளவு வேகத்தில், எந்த திசையில் வரும் என எல்லாவற்றையும் நொடி பொழுதில் கணிக்கும் முறையாகும். இந்திய அணியில் கடந்த 2019 உலகக் கோப்பை, வங்கதேசத்திற்கு எதிரான நிதாஸ் கோப்பை பைனலில் எல்லாம் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆட இவர் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

( இனி நீங்க ஆடுனா என்ன.. ஆடாட்டி என்ன? சூர்ய குமாரை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்.. டிரெண்டான மீம்ஸ் )

ரிங்கு சிங்: இதே அபிஷேக்தான் ரிங்கு சிங் வாழ்க்கையையும் மாற்றியது. ஆம். அபிஷேக் நாயர் மற்றும் ரிங்கு சிங் இடையேயான நட்பு 2018 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் (KKR) இருந்தபோது தொடங்கியது. ரிங்குவிடம் அபிஷேக் திறனைக் கண்ட காரணத்தால் அவருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை அளிக்க தொடங்கி உள்ளார்.

அலிகாரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் இருந்து பிறந்த ரிங்குவுக்கு ,கிரிக்கெட்டில் சிறந்த ஆற்றல், அனுபவம் தானாகவே இருந்துள்ளது. ஆனால் கிராமத்தில் இருந்து வந்ததால் அவர் கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவாக இருந்துள்ளார். இதனால் அவரின் மனநிலையில் மாற்றம் தேவைப்பட்டது, அதை அபிஷேக்தான் தொடர் பயிற்சி மற்றும் ஆலோசனைகளின் மூலம் மாற்றி உள்ளார்.

இதை பற்றி அபிஷேக் தினேஷ் கார்த்திக்கிடம் அடிக்கடி கூறி இருக்கிறார். ரிங்கு சிங் விரைவில் பெரிய வீரர் ஆவார். பார்த்துக்கொண்டே இருங்கள். அவரிடம் மரண அடி அடிக்கும் திறன் உள்ளது என்று புகழ்ந்து இருக்கிறார். கொல்கத்தா அணியில் இருந்த போது ரிங்கு சிங்கிற்கு தொடர் பயிற்சிகளை அளித்ததன் மூலம் அவரின் வாழ்க்கையை மாற்றி உள்ளார்.

ரிங்கு சிங்கிற்கு காயத்தின் போது கூட, அபிஷேக் ஆதரவாக இருந்தார். KKR CEO வெங்கி மைசூரை சந்தித்து ரிங்குவை அணியின் ஒரு பகுதியாக வைத்திருக்கும்படி அபிஷேக்தான் வற்புறுத்தினார். பயிற்சி கொடுக்க வசதியாக அபிஷேக்தான் ரிங்குவை அணியில் வைத்திருக்கும் முடிவை எடுத்தார்.

ரிங்குவை தொடர் முழுக்க KKR உடன் பயணிக்கவும், பயிற்சி எடுக்கவும் அபிஷேக் அனுமதித்தார். ரிங்கு ஐபிஎல்லுக்குப் பிறகு கூட அபிஷேக் இல்லத்தில் பயிற்சிக்கா, ஆலோசனைகளை பெறுவதற்காக பல மாதங்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டிலேயே வைத்து ரிங்குவை வளர்த்து இருக்கிறார் அபிஷேக் .

How did Abhishek Nayyar Change the life of Rinku Singh with his techniques?

புதிய பினிஷர்: இதன் மூலம்தான் ரிங்கு சிங் இந்திய அணியின் புதிய பினிஷராக உருவெடுத்து உள்ளார். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய இந்திய டி 20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களுக்கு 208-3 ரன்களை எடுத்தது. ஸ்மித் 41 பந்தில் 52 ரன்கள், ஜோஸ் இங்கிலீஸ் 50 பந்தில் 110 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட்டிங் செய்தது.

ருதுராஜ் டக் ரன் அவுட் ஆனாலும் கூட.. இஷான் கிஷான் 39 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். அதேபோல் சூர்யா குமார் 42 பந்தில் 80 ரன்கள் எடுத்தார். இவர் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்தார்., கடைசியில் ரிங்கு சிங் 14 பந்தில் 22 ரன்கள் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்தார்.

ரிங்கு அதிரடி: ரிங்குவின் அதிரடி நேற்று பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ரிங்கு தொடர்ச்சியாக ஆட்டங்களை பினிஷ் செய்யும் மிக முக்கியமான வீரராக உருவெடுத்து உள்ளார். - 38(21) - 37*(15) - 22*(14) இதுதான் கடந்த 3 போட்டிகளில் அவர் அடித்த ரன்கள். தோனியின் பினிஷிங் இடத்தை டி 20 போட்டிகளில் கண்டிப்பாக இவர் நிரப்புவார் என்றே எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+