அன்பான மக்கள்! உலகத்தின் பார்வையையே மாற்றிய சென்னை.. வியந்து பார்த்த கிரிக்கெட் வேர்ல்ட்.. கெத்து!
சென்னை: நேற்று பாகிஸ்தான் - ஆபகானிஸ்தான் போட்டியில் தமிழர்கள் நடந்து கொண்ட விதம் உலக நாடுகளை வியந்து பார்க்க வைத்துள்ளது.
நேற்று ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மேட்ச் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. ஆப்கானிஸ்தான் வென்ற இந்த மேட்சில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வந்த போது சென்னை ரசிகர்கள் அதை தீவிரமாக கொண்டாடினார்கள். முக்கியமாக பாபர் ஆஸம் ஆட வந்த போது சென்னை ரசிகர்கள் பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினார்கள்.
அதோடு நிற்காமல் சென்னை ரசிகர்கள் பலர் பச்சை நிறத்தில் பாகிஸ்தான் உடை அணிந்து வந்து கூட பாகிஸ்தான் அணியை கொண்டாடினார்கள். உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்களை இந்த சம்பவம் ஈர்த்து உள்ளது.

1. இதில் தமிழர்கள் பலர் பாகிஸ்தான் உடை அணிந்து வந்தனர். ஆனாலும் நாங்கள் இந்தியாவிற்குத்தான் ஆதரவு. இப்போது இந்தியா ஆடவில்லை என்பதால் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றனர்.
2. ஆனால் கடைசியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் சென்னை ரசிகர்கள் ஒன்றும் சோகம் அடையவில்லை. இது கிரிக்கெட்தான்.. மாரல் சப்போர்ட்தான் என்பதை உணர்ந்து கொண்டு உடனே ஆப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
3. ஆப்கானிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று நீண்ட கரகோஷம் எழுப்பி கொண்டாடினார்கள்.
4. இதெல்லாம், போக ஆட்டத்தின் தொடக்கத்தில் பேப்பருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது.. பாகிஸ்தான் அணியை ஆதரித்தது.. ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பேட்டிங்கிற்கு கரகோஷம் எழுப்பியது என்று சென்னை ரசிகர்கள் உலக கிரிக்கெட்டையே திரும்பி பார்க்க வைத்தனர்.
( சேப்பாக்கத்தில் கதறிய பாகிஸ்தான்! செமி பைனல் போவது இந்த 4 டீம்தான்! சர்ப்ரைஸாக உள்ளே வந்த பெரிய அணி )
5. இரண்டு பேர் ஜோடியாக வந்தால் ஒருவர் பாபர் ஜெர்சி\.. ஒருவர் கோலி ஜெர்சி என்று சொல்லி வைத்தது போல ஒற்றுமையாக வந்தனர். நாங்கள் இந்தியர்கள்தான் ஆனால் பாகிஸ்தானை இந்த போட்டியில் ஆதரிப்போம் என்பது போல சொல்லி வைத்து வந்தனர். அந்த வேறு அரசியல் ரீதியாகவே அவர்களுக்கு தெளிவாக தெரிந்தது.
6. நேற்று நடத்த மேட்சில் ரசிகர்கள் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்த்தனர்.
7. ஐசிசி கூட சென்னை ரசிகர்களின் செயலை போஸ்ட்டாக பகிர்ந்து கொண்டாடி உள்ளது. இதை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து சென்னை மக்கள் அன்பனவர்கள் என்று கூறி வருகின்றனர்.

8. சென்னையை சேர்ந்த ரசிகர் ஒருவர் பேசுகையில்.. அகமதாபாத்தில் நடந்த சம்பவம் அருவருப்பை அளிக்க கூடியது. அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்திருக்க கூடாது. இந்தியாவா பாகிஸ்தானா என்றால் இந்தியாவைத்தான் ஆதரிக்க வேண்டும். அதற்காக பாகிஸ்தானை இப்படி அவமதிக்க கூடாது. அவர்கள் நம் நாட்டிற்கு வந்த விருந்தாளிகள். அவர்களை நாம் சரியாக நடத்த வேண்டும்.
9. நம்முடைய நாட்டிற்கு வந்த மக்களை இப்படி வேண்டும் என்று அவமதித்து கிண்டல் செய்ய கூடாது. அது மோசமான குணம். நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நாம் இப்படி நடத்த மாட்டோம் இல்லையா? அப்படித்தான் இதுவும். இன்று நாங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறோம். பாகிஸ்தான் நல்ல அணி. இது கிரிக்கெட். இதில் மதம் அரசியலை கொண்டு வரக்கூடாது, என்று அந்த ரசிகர் பேசி உள்ளார்.
10. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பேசுகையில், ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் அகமதாபாத் மைதானத்தில் 4 பாகிஸ்தான் ஜெர்ஸிகள் மட்டுமே பார்க்க முடிந்தது. அங்கே பாகிஸ்தான் ரசிகர்களே இல்லை. எங்களுக்கு அங்கே ஆதரவு இல்லாமல் பிசிசிஐ நடத்தும் ஆட்டம் போன்ற சூழ்நிலை நிலவியது. ஐசிசி ஆட்டம் போலவே நிலைமை இல்லை. ஆனால் சென்னையில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இங்கே எங்களுக்கு பெரிய ஆதரவு இருக்கிறது . சென்னையில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்து வந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் ஆதரவு தென்னிந்தியாவை நேசிக்க வைக்கிறது., என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாராட்டி மகிழ்ந்து உள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications