சேப்பாக்கத்தில் கதறிய பாகிஸ்தான்! செமி பைனல் போவது இந்த 4 டீம்தான்! சர்ப்ரைஸாக உள்ளே வந்த பெரிய அணி
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் 50 ஓவர் போட்டி தீவிரமாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடரில் இல்லாத விறுவிறுப்பு இப்போது தொற்றிக்கொண்டு உள்ளது. இப்போது உள்ள நிலையில் நியூசிலாந்து, இந்தியா இரண்டும் கிட்டத்தட்ட செமி பைனல் செல்வது உறுதியாகி உள்ளது.
கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 5 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
நியூசிலாந்து அணி: இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. இந்த போட்டியை தவிர வரிசையாக மற்ற போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் நியூசிலாந்து, இந்தியா இரண்டும் கிட்டத்தட்ட செமி பைனல் செல்வது உறுதியாகி உள்ளது.
இன்னொரு பக்கம் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது. அதேபோல் மிக அதிகமாக +2.212 ரன் ரேட் வைத்துள்ளது. 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கீழே இருந்த ஆஸ்திரேலியா அணி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி உள்ளது. மீண்டும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் சர்ப்ரைஸாக மேலே வந்த அணி என்றால் அது ஆஸ்திரேலியா அணிதான். அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணி மேலே வந்துள்ளது. இதன் மூலம் இந்த 4 அணிகள்தான் செமி பைனல் செல்லுமோ என்ற எண்ணம் தோன்றி உள்ளது. ஆனால் இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. ஆட்டம் செல்ல செல்ல முடிவுகள் வெகுவாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

இப்போது உள்ள நிலையில் நியூசிலாந்து, இந்தியா இரண்டும் கிட்டத்தட்ட செமி பைனல் செல்வது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகளும் வலுவாக உள்ளன. இதில் பாகிஸ்தான்தான் அதிக அதிர்ச்சி அளித்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. நேற்று முதலில் இறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 282/7 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து இறங்கிய ஆப்கானிஸ்தான் எளிதாக 49 ஓவரில் வெறும் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 286/2 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் 5 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் வென்று பாகிஸ்தான் பின்னோக்கி சென்றுள்ளது. அதேபோல் 4 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டும் வென்று இங்கிலாந்து அணியும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்று அதிர்ச்சி அளித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications