பும்ரா இல்லை! ரோஹித் பார்ம் இல்லை! ஆனா இந்தியா தொடர் வெற்றி! இந்த விஷயத்தை கிராக் செய்ததுதான் காரணம்
சென்னை: 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று வலுவான நாடுகளை இந்தியா வீழ்த்தி வென்று வருகிறது.
இந்தியாவின் இந்த தொடர் வெற்றிக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.

1. இந்திய அணியில் பும்ரா இல்லை. ஆனாலும் பவுலிங்கில் ஷமி அவரின் இடத்தை நிரப்புகிறார். துபாய் பிட்ச் பெரிதாக பாஸ்ட் பவுலிங்கிற்கு இடம் கொடுக்காது என்பதால் பும்ரா தேவையும் இல்லை.
2. கடந்த டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு வரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருந்தது. ஆனால் அது தற்போது சரியாகிவிட்டது.
3. ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் குறைந்தது 40 முதல் 80 ரன்கள் வரை அடிக்கிறார். இது இந்திய அணிக்கு பெரிய பலமாக மாறிவிட்டது.
4. கூடுதலாக அக்சர் பட்டேல் மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் கொடுக்கிறார். அவர் ஆட்டத்தை தேவையான நேரத்தில் சரிவில் இருந்து மீட்கிறார். ஒரு காலத்தில் கைப் என்ற ஒரு வீரர் ஆடியதை போலவே இவரும் ஆடுகிறார்.
5. அதேபோல் பினிஷ் செய்வதற்கு நிறைய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என்று நம்பிக்கையான இணை கடைசி கட்டத்தில் இறங்கி ஆட்டத்தை மாற்றும் சூழல் உள்ளது.
6. இதுதான் ரோஹித் சர்மா பார்மில் இல்லை என்றாலும் இந்தியா வெல்ல காரணம். கோலி, ஷ்ரேயாஸ் , அக்சர், ஜடேஜா, பாண்டியா என்ற நீண்ட பேட்டிங் லைன் அப் இருப்பதால் ஓப்பனிங் சொதப்பினாலும் இந்திய அணிக்கு சிக்கல் இல்லை.
7. இதெல்லாம் போக மிடில் ஆர்டரில் கூடுதலாக கே.எல் ராகுல் இருக்கிறார். அவர் தொடர்ந்து ஆட்டத்தில் நிதானத்தை கடைப்பிடித்து அணியை சரிவின் இருந்து மீட்கிறார். மிடில் ஆர்டரை கிராக் செய்ததே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. "நான் மைதானத்திற்குள் நுழைந்தபோது நீங்கள் இறுதிவரை இருக்க வேண்டும். எல்லா ஓவர்களிலும் நான் ரிஸ்க் எடுக்கிறேன். நிதானமாக விளையாடுங்கள். அணிக்கு நீங்கள் தேவை" என விராட் கோலியிடம் கூறினேன். அவர் அதை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டார், என்று ராகுல் கூறியது போலவே அவர் தேவைப்படும் நேரங்களில் ரிஸ்க் எடுக்கிறார்.
8. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இதற்கு முன் 2011 உலகக்கோப்பையில்தான் இவ்வளவு பலமாக இருந்தது.
9. பவுலிங்கில் ஸ்பின் பவுலர்கள் அடிக்கடி ஆட்டத்தை மாற்றுகின்றனர். முக்கியமாக.. வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தில் விக்கெட் தேவைப்படும் நேரத்தில் சரியாக விக்கெட் எடுத்து கொடுக்கிறார்.
10. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக உள்ளது. 40 ஓவருக்கு பின் குல்தீப் யாதவை அடிக்கடி களமிறக்கிறார். இந்த புதிய பிளானிங் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.
இதெல்லாம் போக கோலி பார்மில் இருக்கிறார். ஒரு சதம்.. அதை தாண்டி அடுத்தடுத்து அரை சதங்களை தாண்டிய ஸ்கோர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications