கத்துக்கணும்! 2022ல் பாட் கம்மின்ஸ் எடுத்த துணிச்சல் முடிவு! ஆஸ்திரேலியா "அப்பவே" கப் அடிச்சிடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2022 நவம்பரில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் எடுத்த முடிவு ஒன்று அந்த அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடியும் கூட தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி 10 போட்டிகளை இந்தியா வென்றது.

ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்தியாவின் சிறப்பாக உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது.

ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

How did Pat Cumminss decision last year help Australia against India in 2023 World Cup Finals?

பாட் கம்மின்ஸ் முடிவு: 2022 நவம்பரில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் எடுத்த முடிவு ஒன்று அந்த அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. 2022 நவம்பரில்தான் அவர் ஐபிஎல் ஆட மாட்டேன் என்ற முடிவை எடுத்தார் . அடுத்த சீசன் நான் ஆட போவது இல்லை.

உலகக் கோப்பை டெஸ்ட், உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதில் பயிற்சி எடுக்க வேண்டும். இதனால் வேறு போட்டிகளில் ஆட முடியாது. அதனால் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க போகிறேன் என்ற முடிவை கம்மின்ஸ் எடுத்தார்.

( உஷாராகிவிட்டாரே.. கப்பை கையில் தந்ததும் மோடி தந்த ரியாக்சன்.. குழம்பிய கம்மின்ஸ்.. நடந்தது என்ன?)

அவரின் அந்த முடிவு ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாறியுள்ளது. அதன்பின் உலகக் கோப்பை டி 20ல் ஆஸ்திரேலியா வென்றது. அதன்பின் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. அதன்பின் உலகக் கோப்பை டெஸ்ட் தொடரில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.

அதை தொடர்ந்து தற்போது ஒருநாள் உலகக் கோப்பையையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த கோப்பையைகளை வரிசையாக வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பாட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.

பாட் கம்மின்ஸ்: பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக வந்ததே விபத்துதான். ஸ்மித் வர வேண்டும் என்றாலும் ஆஸ்திரேலியா அணி அவர் பக்கம் செல்லவில்லை. வார்னருக்கும் கேப்டன் ஆவதில் வாழ்நாள் தடை உள்ளது. டிம் பெயின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் பாட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில்தான் கேப்டன் ஆனார். அதன்பின்தான் பாட் கம்மின்ஸ் வரிசையாக கோப்பைகளை அள்ளி குவித்துள்ளார்.

How did Pat Cumminss decision last year help Australia against India in 2023 World Cup Finals?

இந்தியா தோல்வி: நேற்று முதலில் இறங்கிய இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது . முக்கியமாக பேட்டிங்கில் ரோஹித், கோலி, ராகுல் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. பவுலிங்கில் ஷமி, பும்ரா தொடக்கத்தில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கடுமையாக ரன்களை வாரி வழங்கினார். இந்த உலகக் கோப்பை முழுக்க அவர் சரியாக ஆடவில்லை. கூடுதலாக ட்யூ வேறு சேர்ந்துகொண்டது . இதனால் பவுலர்கள் பலரும் லைன், லென்த் கூட தவறாக போட்டனர்.

பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்பி தொடங்கினர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கினார். அவர்களின் இந்த சொதப்பல் காரணமாக ஹெட் விக்கெட்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை. இன்று ஹெட் மட்டும் 137 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+