ஆணவம்.. அகந்தை.. சச்சின் பேச்சை காதில் வாங்காத ப்ரித்வி ஷா.. கிரிக்கெட் கெரியர் காலியானது எப்படி?
சென்னை: 2018 இல் இந்தியா U-19 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல காரணமாக இருந்த அணியின் கேப்டனாக இருந்தவர் ப்ரித்வி ஷா. அதே ஆண்டு ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு (முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப்) எதிரான ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
அந்த மேட்சில் அவரின் ஆட்டம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான அடுத்த போட்டியில், வெறும் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதன்பின் இந்திய அணியிலும் இடம்பெற்று இவர் அதிரடியான ஆட்டங்களை ஆடினார்.

அடுத்த சச்சின்.. அடுத்த கோலி.. எதிர்காலம் இவர்தான் என்றெல்லாம் பாராட்டுக்கள் வைக்கப்பட்டது. அவர் DC இன் விளையாடும் XI இன் நிரந்தர உறுப்பினராகவும் மாறினார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி இவரை தக்க வைத்தது. வரும் கால சூப்பர் ஸ்டார் என்று பாராட்டப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் கடந்த ஏழு சீசன்களில் டிசிக்காக ஷா மொத்தம் 79 போட்டிகளில் விளையாடி 1892 ரன்கள் எடுத்தார். ஆனால் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் அணியால் தக்கவைக்கப்படவில்லை, டெல்லி கேபிடல்ஸ் அவரை விடுவித்த பிறகு அவரின் சரிவு தொடங்கியது. கோபம், ஆணவம், திமிர் பேச்சு, பிட்னஸ் மீது கவனம் செலுத்தாமல் போனது அவருக்கு எதிராக மாறியது. கடந்த இரண்டு சீசன்களில் அவரால் 16 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. காரணம் பிட்னஸ். அவர் கடந்த சீசனில் வெறும் 198 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இந்த முறை வாய்ப்பை இழந்துள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஷா விற்கப்படாமல் போனதால் பல முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் விளையாட்டின் வல்லுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர் உச்சத்தில் இருந்த சமயத்திலேயே இவரின் நடத்தை மீது புகார்கள் வைக்கப்பட்டது. போதை உபகரணங்களை பயன்படுத்துகிறார், மது குடிக்கிறார் என்றும் கூட புகார்கள் வைக்கப்பட்டன,
அவரை அடிக்கடி சந்தித்த சச்சின் டெண்டுல்கர், ராகு ; டிராவிட், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இவரிடம் அடிக்கடி அறிவுரைகளை வழங்கினர். ஏன் சவுரவ் கங்குலியும் கூட இவரிடம் அறிவுரை வழங்கி உள்ளனர். இவர் யார் கூறிய அறிவுரையையும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சில ஜாம்பவான்கள் அறிவுரை கூறிய சமயத்தில் அதை கேட்கவில்லை. பிசிசிஐ அவரிடம் பிட்னஸ் தொடர்பாக கூறிய சில அறிவுரைகளை வெளிப்படையாக அவர் மறுத்துள்ளார். சில பிசிசிஐ அலுவலர்களை கேலி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஷாவின் மோசமான செயல்: ஷாவின் முன்னாள் பயிற்சியாளர் ஜவாலா சிங், அவருடன் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர், ஷா செய்த தவறுகள் குறித்து அவர் பேசி உள்ளார்.
பிரித்வி 2015 இல் என்னிடம் வந்து மூன்று வருடங்கள் என்னுடன் இருந்தார். அவர் வந்தபோது, அவர் மும்பை அண்டர்-16 போட்டிகளில் விளையாடவில்லை, அவருடைய தந்தை என்னிடம் ஷாவை வழிநடத்த சொன்னார். அடுத்த ஆண்டே, அவர் 19 வயதுக்குட்பட்ட கூச் பெஹர் டிராபியில் விளையாடினார். சில தேர்வு போட்டிகளில் பெரிய ஸ்கோர் செய்தார். நான் அவருக்காக மிகவும் கடினமாக உழைத்தேன். அவர் ஆரம்பத்திலிருந்தே திறமைசாலியாக இருந்தார். அவருக்காக பல பயிற்சியாளர்கள் பணியாற்றியதால் நான் முழு கிரெடிட்டை எடுக்க மாட்டேன். ஆனால் அந்த 3 ஆண்டுகள் நான் மட்டுமே அவருடன் இருந்தேன். அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடியபோது நான் உற்சாகமாக இருந்தேன்.
ஏனென்றால் அந்த தொடருக்கு தேர்வாகும் என் முதல் மாணவர் அவர்தான். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு செல்வதற்கு முன்பு, அவர் என்னுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். ஆனால் அதன் பிறகு, நான் அவரைப் பார்க்கவில்லை. அந்த தொடருக்கு சென்று வந்த பின் அவர் என்னை கண்டுகொள்ள கூடவில்லை. அது 2017, நாங்கள் 2024 இல் இருக்கிறோம்; நான் அவரைப் பார்க்கவில்லை; அவர் என்னிடம் எதற்காகவும் வரவில்லை. அவரின் இந்த சரிவிற்கு காரணம் தெரியவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications