இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.. இந்திய அணிக்கு கம்மின்ஸ் பிரஷர் போட்டது எப்படி? பிளானே வேறு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி கடுமையாக பிரஷர் போட்டுள்ளது. 300+ ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிட்ச் ஒன்றில் இந்திய அணி திணறடியபடி பேட்டிங் ஆடி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் பட்டி பைனல் மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் வேகமாக ஆடிய இந்திய அணி தற்போது மிகவும் நிதானமாக ஆடி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த காரணத்தால் இந்திய அணி தற்போது மோசமாக திணறிக்கொண்டு உள்ளது.

இந்திய அணி வேகமாக இன்று ஆட்டத்தை தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

How did Team Australia control India batting line upin 2023 World Cup Finals?

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.

( இரவோடு இரவாக நடந்த சம்பவம்.. ஆஸ்திரேலியா கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. இந்தியாவிற்கு )

இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர்.

என்ன காரணம்?: இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு பிரஷர் போட மிக முக்கியமான காரணம் உள்ளது. அந்த காரணம் .. பீல்டிங் செட்டப். அதற்கு ஏற்றபடி பவுலிங். இந்த மேட்ச் முழுக்க கம்மின்ஸ் செய்த பீல்டிங் செட்டப் மிக வித்தியாசமாக இருந்தது.

How did Team Australia control India batting line upin 2023 World Cup Finals?

unorthodox field placement என்று சொல்லும் அளவிற்கு ஆஸ்த்திரேலியாவின் பீல்டிங் செட்டப் இருந்தது. ஆப் சைட் திசையிலும் மிக குறைவாக பவுலிங் செய்து ரன்கள் செல்வதை கட்டுப்படுத்தினர். விக்கெட் எடுப்பதை விட பவுண்டரியை தடுப்பது, ஒன்று , இரண்டு ரன்கள் செல்வதை தடுப்பது மூலம் பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் கொடுத்து.. அப்போது பிரஷர் காரணமாக பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முயன்றால் விக்கெட் எடுப்பதுதான் இன்று ஆஸ்திரேலியாவின் வியூகமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா வெறும் 240 ரன்களை மட்டும் அனைத்து விக்கெட்டுகளை இழந்து எடுத்துள்ளது.

அணி விவரம்: இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.

How did Team Australia control India batting line upin 2023 World Cup Finals?

இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+