இரவோடு இரவாக நடந்த சம்பவம்.. ஆஸ்திரேலியா கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. இந்தியாவிற்கு "திடுக்"!
சென்னை: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அணி சிறப்பாக ஆடி வருகிறது. தொடக்கத்தில் வேகமாக ஆடிய இந்திய அணி தற்போது மெதுவாக ஆட தொடங்கி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை பைனல்ஸ் ஆட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் தொடக்கத்தில் இருந்து ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இதில் இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் வீரர்கள் நிதானமாக விக்கெட்டை இழக்காமல் ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா டாஸ்: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் பாட் கும்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் இங்கே தொடக்கத்தில் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.போக போக பிட்ச் ட்ரை ஆகும். அப்படி ஆனால் பேட்டிங் செய்வது கஷ்டம். பிட்ச் ஸ்லோ ஆகிவிடும். என்னதான் பனிபொழிந்தாலும், பந்து வழுக்கினாலும் கூட இதை தாண்டி இரண்டாவது பேட்டிங் செய்வது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படி இருக்க இவர் பவுலிங் தேர்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதற்கு காரணம் நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம்தான் என்கிறார்கள். நேற்று இரவு ஆஸ்திரேலியா டீம் மற்றும் பயிற்சியாளர் குழு மாலை 6.30 மணியில் இருந்து மைதானத்தில் இருந்துள்ளனர். அப்போது 7.15 மணிக்கு பிட்சில் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. பிட்ச் ஈரமாகி உள்ளது. இதைதான் சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியா அணி பவுலிங் எடுத்துள்ளது.
( டிராவிட் அனுப்பிய மெசேஜ்.. ஷாக்கான அஸ்வின்.. கம்மின்ஸும் பெரிய தவறு பண்ணிட்டாரே.. என்ன இது?)
ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பந்து வலுக்கும். ஸ்விங் ஆகாது. இதனால் பேட்டிங் எளிதாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
இந்திய அணி மாற்றம்: இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.
இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

இந்தியா விக்கெட்: இந்திய அணி வேகமாக இன்று ஆட்டத்தை தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.
அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications