டிராவிட் அனுப்பிய மெசேஜ்.. ஷாக்கான அஸ்வின்.. கம்மின்ஸும் பெரிய தவறு பண்ணிட்டாரே.. என்ன இது?
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 2023 இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று. இன்று இரவு 11 மணிக்குள் இந்த உலகக் கோப்பையின் வின்னர் யார் என்று தெரிந்துவிடும். இதுவரை ஒரு போட்டிகளில் கூட தோல்வி அடையாமல் இந்திய அணி பைனலுக்கு வந்துள்ளது.
இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர். இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.
அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
( சாதாரண வெற்றி மட்டுமல்ல.. பைனலில் ரோஹித் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம்.. இதுதான் முக்கியம்!)
டிராவிட் மெசேஜ் - அஸ்வின் சோதனை; இன்று போட்டிக்கு முன் அஸ்வினையா அழைத்து ராகுல் டிராவிட் பேசினார். அந்த பேச்சுக்கு பின் அஸ்வின் உடனடியாக சென்று பிட்சை சோதனை செய்தார். இதனால் அஸ்வின் இறங்குவாரோ என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அவர் மீண்டும் போய் டிராவிட்டிடம் பிட்ச் பற்றி ஆலோசனைகளை வழங்கினார். பெரும்பாலும் அஸ்வினின் கருத்தை டிராவிட் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அஸ்வினுக்கு பிட்ச் பற்றிய புரிதல் அதிகம் என்பதால் அவரிடமும் கருத்து கேட்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அஸ்வின் இப்படி சோதனை.செய்ததும் இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா பவுலிங்; ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் பாட் கும்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் இங்கே தொடக்கத்தில் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.போக போக பிட்ச் ட்ரை ஆகும். அப்படி ஆனால் பேட்டிங் செய்வது கஷ்டம். பிட்ச் ஸ்லோ ஆகிவிடும். என்னதான் பனிபொழிந்தாலும், பந்து வழுக்கினாலும் கூட இதை தாண்டி இரண்டாவது பேட்டிங் செய்வது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படி இருக்க இவர் பவுலிங் தேர்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை அஸ்வினும் பத்ரிநாத்திடம் கூறி உள்ளார். அதன்படி.. நாங்கள் டாஸ் வென்றால் பேட்டிங்தான் எடுத்திருப்போம். அவர்கள் எங்களுக்கு பேட்டிங் கொடுத்தது அதிர்ச்சியாக குழப்பமாக உள்ளது என்று கூறி இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications