சாதாரண வெற்றி மட்டுமல்ல.. பைனலில் ரோஹித் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம்.. இதுதான் முக்கியம்!
சென்னை: 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சாதாரண வெற்றியை பெறக்கூடாது.. மாறாக.. மிகப்பெரிய அளவு வித்தியாசத்தில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இன்று நடக்கும் 2023 உலகக் கோப்பை வேறும் பைனல் என்பதை தாண்டி எந்த அளவிற்கு 90ஸ், 80ஸ் கிட்ஸ்களுக்கு முக்கியம் என்பது 2கே கிட்ஸ்களுக்கு தெரிந்து இருக்காது. ஆனால் 20 வருடமாக இந்தியர்கள் மனதில் இருக்கும் காயத்தை ஆற்ற போவது இன்று ஒருநாள் நடக்கும் போட்டிதான்.

2003 உலகக் கோப்பை பைனல்; 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள். கங்குலியின் மோசமான கேப்டன்சி, அவரின் திட்டமிடல் எல்லாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு டாஸில் அவர் எடுத்த முடிவும் கூட கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து.. 359/2 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் 140* (121) ரன்கள் எடுத்து இந்திய அணியை துவம்சம் செய்தார். நல்ல பவுலிங் இருந்தும் சரியான ரொட்டேஷன், பீல்டிங் செட்டப், பிரஷர் போடுதல் போன்ற எந்த பணிகளையும் செய்யாமல்.. கங்குலியின் மோசமான கேப்டன்சியை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் விளாசியது.
அந்த போட்டியில் எக்ஸ்டரா மட்டும் 37 ரன்கள் சென்றது. அந்த அளவிற்கு இந்தியாவின் ஆட்டம் மோசமாக இருந்தது.
இந்தியா பேட்டிங்: அதன்பின் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மட்டும் 82 ரன்கள் எடுத்தார். சச்சின் 4 , கங்குலி 24 எடுத்து சொதப்பினர். அதன்பின் ராகுல் டிராவிட் 47 எடுத்தார். அதன்பின் யுவராஜ் சிங் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆக இந்திய அணியின் அடுத்த விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தது. 39.2 ஓவருக்கு 234 ரன்களை மட்டும் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்தது.
மோசமான மேட்ச்: அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.. அணிக்கு பெரிய காயமாக.. களங்கமாக மாறியது. இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்தியது.
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சாதாரண வெற்றியை பெறக்கூடாது.. மாறாக.. மிகப்பெரிய அளவு வித்தியாசத்தில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோரிக்கை 1: இந்த வெற்றி சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. அதிக ரன்கள், விக்கெட் வித்தியசாத்தில் வேலால் வேண்டும்.
கோரிக்கை 2 - ஆஸ்திரேலியா சேசிங் செய்தால் 100 ரன்கள் வித்தியாசத்திலாவது வெல்ல வேண்டும். இந்தியா சேசிங் செய்தால் விக்கெட் இழப்பின்றி வெல்ல வேண்டும்.
கோரிக்கை 3 - இந்த ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்க கூடாது. கடைசி வரை இந்தியாதான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். வெற்றி பெறுவதை விட எப்படி வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியம். ரோஹித் சர்மா அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications