ப்பா மனசுல நின்னுட்டாரே.. தங்கம் சார்.. மேட்ச் முடிந்ததும் கம்மின்ஸ் செய்த செயல்.. என்ன மனுஷன்யா!
சென்னை: இந்தியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் செய்த செயல் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2023 உலகக் கோப்பை பைனல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. நேற்று தொடக்கத்தில் பெரிய நம்பிக்கையோடு இந்திய அணி களமிறங்கியது. வரிசையாக 10 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்றது.
இந்த வெற்றி காரணமாக நேற்று நடக்கும் போட்டியிலும் கூட நேற்று இந்தியா வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய அணி திணறியது. ரோஹித் சர்மா 47 ரன்களில் அவுட் ஆன பின் ஆஸ்திரேலிய அணி பவுலிங்கி ல் அதிரடி காட்டியது.

கோலி: நேற்று கோலி மட்டும் அவுட் ஆகவில்லை என்றால் இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும். அணியின் ஸ்கோரும் நேற்று நன்றாக இருந்திருக்கும். ஆனால் கோலி அரைசதம் அடித்து அவுட்டான பின் அணியின் சரிவு தொடங்கியது. அதன்பின் நிதானமாக ஆடிய கே எல் ராகுலும் கூட அரைசதம் அடித்த சில மணி நேரங்களில் அவுட் ஆனார்.
( இந்த 2 பேர் எதுக்கு டீம்ல இருந்தாங்கன்னே தெரியலையே.. ரோஹித் தந்த இடம்.. டீமிற்கே எதிராக போய்விட்டது!)
இதை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வீரர்கள் 240 ரன்களுக்கு சுருண்டனர். 50 ஓவரில் இந்தியா 240 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் இலக்கை அடைந்து எளிதாக வென்றது. டிராவிஸ் ஹெட் முக்கியமாக 137 ரன்களை எடுத்தார்.
பாட் கம்மின்ஸ் ஆட்டம்: நேற்று பாட் கம்மின்ஸ் முறையாக திட்டமிட்டு ஆடினார். முக்கியமாக ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திட்டமிட்டும் விக்கெட்டுகளை எடுத்தனர். கோலிக்கு பீல்டிங் செட்டப் செய்து பிரஷர் போட்டு அவரை போல்ட் செய்தார். அதேபோல் ஒவ்வொரு வீரருக்கும் கம்மின்ஸ் சிறப்பாக பிளான் போட்டார்.
பவுலிங் ரொட்டிஷன் தொடங்கி பீல்டிங் செட்டப் வரை எல்லாமே சிறப்பாக கம்மின்ஸ் செய்தார். அவரின் சிறப்பான கேப்டன்சி காரணமாக.. ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.

பாட் கம்மின்ஸ் செயல் : நேற்று ஆட்டத்திற்கு பின் பாட் கம்மின்ஸ் செய்த செயல் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கோப்பையை வென்ற பின் அவர் அகமதாபாத் கிரவுண்ட் ஸ்டாப்களிடம் சென்று அந்த கோப்பையை கொடுத்து அவர்களின் போட்டிகளை எடுத்துக்கொண்டார். அவர் முகம் முழுக்க அப்போது சிரிப்பாக இருந்தது.
பொதுவாக ஆஸ்திரேலிய கேப்டன்கள் இப்படி செயல்பட மாட்டார்கள். அவர்கள் சிரிக்கவே மாட்டார்கள். ஆனால் பாட் கும்மின்ஸ் எல்லா இடங்களிலும் சிரித்தபடி இருக்கிறார். ரிக்கி பாண்டிங், பழைய வார்னர் போல இல்லாமல்.. தன்மையாக இருக்கிறார் . அதோடு எந்த வீரரையும் ஸ்லெட்ஜிங் செய்யாமல் அவர் ஆடும் விதமும் கவனம் பெற்றுள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ரசிகர்களின் "பேவரிட்" கேப்டனாக உருவெடுத்துள்ளார் பாட் கம்மின்ஸ்!












Click it and Unblock the Notifications