அம்மாடி.. இவ்வளவு கோடி ரூபாயா? கிரிக்கெட் வீரர் சாஹலிடம் மனைவி தனஸ்ரீ கேட்கும் ஜீவனாம்சம்! எவ்வளவு?
சென்னை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாஹலிடம் இருந்து அவரது மனைவி தனஸ்ரீ எவ்வளவு ஜீவனாம்சம் பெறுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் வர தொடங்கி உள்ளன.
2020 முதல் சாஹல் மற்றும் தனஸ்ரீயின் திருமண உறவில் உள்ளனர். இதனால் 5 வருடத்திற்கும் குறைவாக அவர்கள் திருமண உறவில் இருப்பதால் இதற்கான ஜீவனாம்சம் குறைவாகவே இருக்கும். இந்த சாஹல் வழக்கில்.. சாஹல் தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய கோடீஸ்வரர். அதேபோல் தனஸ்ரீ தனியாக டான்ஸ் கிளாஸ் நடத்துகிறார்.

இதனால் அவரும் வருமானம் ஈட்டுகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக அலிமோனி அதிகமாக கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் சாஹல் கோடீஸ்வரர் என்பதால் அதை அடிப்படையாக வைத்து அலிமோனி கேட்க வாய்ப்பு உள்ளது.
எவ்வளவு தொகை:
அதிகபட்சம் 60 கோடி ரூபாய் வரை தனஸ்ரீ அலிமோனி கேட்க வாய்ப்புகள் உள்ளன.. அதாவது மாதம் மாதம் கேட்காமல் ஒரே பேமெண்ட்டாக கேட்க வாய்ப்புகள் உள்ளன. 60 கோடி ரூபாய் கேட்கும் திட்டத்தில் அவர் இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. வழக்கு நிலவரத்தை பொறுத்து.. அதாவது வழக்கில் சாஹல் மீது வைக்கப்படும் புகார்கள் அடிப்படையில்.. அல்லது தனஸ்ரீயால் வைக்கப்படும் புகார்கள் அடிப்படையில் ஜீவனாம்சம் குறைக்கப்படலாம்.. அல்லது உயர்த்தப்படலாம்.
இந்திய சட்டம்:
இந்தியாவில் ஜீவனாம்சம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. ஜீவனாம்சம் என்பது தம்பதியரின் தனிப்பட்ட நிதி நிலை மற்றும் நீதிமன்ற விருப்பத்தின் அடிப்படையில் வழக்கிற்கு வழக்கு மாறுபடும். வழக்கில் கணவன் செய்த தவறுகள், மனைவி செய்த தவறுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜீவனாம்சம் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்டது. வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகள் காரணமாக ஜீவனாம்சம் தொகை மாறும்.
70 வயது முதிய பெண்ணுக்கு 3 கோடி ரூபாய்க்கு ஜீவனாம்சம் வழங்கிய வழக்குகள் கூட இந்தியாவில் நடந்துள்ளன. நீண்ட கால திருமணங்களில் விவாகரத்து நடக்கும் பட்சத்தில் அதில் அதிக ஜீவனாம்சத்தை வழங்க வேண்டி இருக்கும்.
விவாகரத்து:
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் பழைய போஸ்டுகள் கவனம் பெற்று வருகின்றன.
யுஸ்வேந்திர சாஹல் எக்ஸ் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் செய்த, பின்னர் டெலிட் செய்யப்பட்ட பழைய போஸ்டுகள் டிரெண்டாகி வருகின்றன. பல பெண்களை இவர் டேட்டிங்கிற்கு அழைத்த போஸ்டுகள் மீண்டும் உலா வருகின்றன.
அதேபோல் நிறைய பெண்களுக்கு இவர் தனியாக டிஎம் மெசேஜ் செய்துள்ளார். அதில் நீண்ட சாட்களை செய்துள்ளார். அதிலும் பெண்களை டேட்டிங் அழைத்துள்ளார். இதெல்லாம் அவர் கிரிக்கெட்டில் பிரபலம் அடையும் முன் செய்த சாட்கள் ஆகும்.
அவரின் இந்த செயல் தற்போது விவாகரத்து செய்திகளுக்கு இடையே தீவிரமாக இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது.
விவாகரத்து:
இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள், விவாகரத்து தொடர்பான செய்திகள் கவனம் பெற்று வருகின்றன. அதேபோல் விவாகரத்து ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளும் கவனம் பெற்று வருகின்றன. தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவாகரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications