மற்ற ஆஸிக்கள் போல இல்லை.. நோ ஸ்லெட்ஜிங்.. சிரித்த முகம்! பழங்குடிகளுக்காக குரல்! கம்மின்ஸ் வேற லெவல்
சென்னை; ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்ற ஆஸ்திரேலிய கேப்டன்கள் போல இல்லாமல் மிகவும் வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார்.
இந்தியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீசி 6வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றி உள்ளது.
மாற்றம் என்ன?: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்ற ஆஸ்திரேலிய கேப்டன்கள் போல இல்லாமல் மிகவும் வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார். பொதுவாக ஆஸ்திரேலிய கேப்டன்கள் கோபமாக செயல்பட கூடியவர்கள். அவர்கள் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்ய கூடியவர்கள்.
எதிரணி வீரர்களை கொஞ்சம் கூட சமாளிக்க மாட்டார்கள். 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

அப்போது சரத் பவார் பிசிசிஐ இயக்குனராக இருந்தார். அவர் கோப்பையை கொடுக்க மேடைக்கு வந்த போது ரிக்கி பாண்டிங் அவரிடம்.. என் கையில் கோப்பையை கொடு என்பது போல கையை சைகை செய்து அவரை அவமானப்படுத்தினார். அதன்பின் மேடையில் இருந்தும் அவரை நகர்த்தி தள்ளி கொண்டு செல்வார்கள். அது பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது. ஆஸ்திரேலிய கேப்டன்கள் காலம் காலமாக இப்படித்தான் நடந்து இருக்கிறார்கள்.
வார்னர் கூட கேப்டனாக இருந்த சமயத்தில் இப்படித்தான் நடந்து இருக்கிறார். இப்போது வார்னர் "நாதஸ் திருந்திட்டான்" என்று சொல்வது போல மொத்தமாக மாறிவிட்டாலும் கூட கேப்டனாக இருந்த போது இப்படித்தான் நடந்திருக்கிறார்.
( ப்பா மனசுல நின்னுட்டாரே.. தங்கம் சார்.. மேட்ச் முடிந்ததும் கம்மின்ஸ் செய்த செயல்.. என்ன மனுஷன்யா!)
கம்மின்ஸ் வேற லெவல்; ஆனால் கம்மின்ஸ் அப்படி இல்லை. அவர் ஸ்லெட்ஜ் செய்யும் குணம் கொண்டவர் இல்லை. அதேபோல் பெரும்பாலும் சிரித்த முகத்தோடு இருப்பர். அவரும் இதை கூறி இருக்கிறார். என்னுடைய கேப்டன்சி வித்தியாசம் ஆனது. நான் கேப்டன்சியை அமைதியாகவே செய்வேன்.
நான் சாந்தமாகவே ஆட கூடியவன் . நான் இப்படித்தான் கேப்டன்சி செய்வேன். ஆஸ்திரேலிய அணியும் இனி இப்படித்தான் வித்தியாசமாக இருக்கும் என்று பாட் கம்மின்ஸ் கூறி இருந்தார். இந்த சீசனிலும் அவர் அப்படிதான் ஆடினார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த போது கூட கம்மின்ஸ் இப்படித்தான் சிறப்பாக செயல்பட்டார்.
ஆஸ்திரேலியா ரேசிசம்: ஆஸ்திரேலியா பொதுவாக நிறவெறி, இனவெறி பிடித்த வீரர்கள் கொண்ட நாடு. பலருக்கு இதுபோல ரேசிசம் புகார்கள் இருந்துள்ளன. ஆனால் கம்மின்ஸ்தான் இதை பற்றி முதலில் வெளிப்படையாக எதிர்த்து பேசியவர்.

அதோடு நிற்காமல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களை காக்க பல பணிகளை, சேவைகளை செய்து வருபவர். ஆஸ்திரேலியா அணி எல்லா தொடருக்கும் முன் பழங்குடி சிம்பிள் முன்.. வெறும் காலோடு வட்டமாக நின்று மரியாதை செய்யும் வழக்கத்தை கொண்டு வர காரணமாக இருந்தவர். அதோடு அணியில் அதிகம் இடம்பிடிக்காத பல்வேறு இனக்குழுவை சேர்ந்த மக்களை அணிக்குள் கொண்டு வந்தார்.
ஹெட் : அதேபோல் இவர் தனது வீரர்களை தோனி போலவே மதித்தார் . உதாரணமாக தோனி ஒரு வீரர் காயம் அடைந்தாலும் கூட முழு ஆதரவு கொடுப்பார். அப்படித்தான் ஹெட் காயம் அடைந்த பின்பும் அவருக்கு முழு ஆதரவு கொடுத்து அவரை மீண்டும் அணியில் கொண்டு வர பாட் கம்மின்ஸ் காரணமாக இருந்தார்.
முதல் சில போட்டிகள் அவர் ஆடிய முடியவில்லை என்றாலும் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது பாட் கம்மின்ஸ்தான். அந்த வகையில் அவரின் கேப்டன்சி.. ஆட்டம் எல்லாமே இந்த சீசனில் டாப் நாட்ச் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications