Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்த டீமும் பிரஷரில் இருந்த போது.. ரோஹித் செய்த அந்த ஒரு செயல்! மேட்சில் ட்விஸ்ட் நடந்ததே அங்குதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. சீட் எட்ஜ் திரில்லர் என்று சொல்லும் அளவிற்கு.. பார்த்திபனா (நியூசிலாந்து).. லியோவா (இந்தியா) யார்தான் பைனல் போக போவது என்று பிரஷரை ஏற்றி.. கடைசி வரை திக் திக் என்று கொண்டு சென்று.. ஒருவழியாக இந்தியா வென்றது.

இந்த உலகக் கோப்பை சீசனில் இந்தியா ஆடிய மேட்ச் எல்லாம் ஒன்சைட் மேட்ச்தான். இந்திய அணி மேட்ச் எதுவும் திரில்லாக இல்லை என்று பலரும் புலம்பியதற்கு.. இந்த வச்சுக்கோங்க ஒரு திரில் மேட்ச் இருக்கு என்று செமி பைனல் மேட்சில் திக் திக் என்று இந்திய அணி வென்றுள்ளது.

பேட்டிங்கில் என்ன நடந்தது: இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம். பந்து அதிகம் ஸ்விங் ஆகும். பனி காரணமாக பந்து வழுக்கினாலும் கூட பேட்டிங் செய்வது கடினம். இதனால் இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது.

How Rohit Sharma pep talk helped team India against New Zealand in Thrilling Semi Finals?

இதை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். வெறும் 70 பந்தில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து 105 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 50 ஓவரில் 397-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து இறங்கி தற்போது பேட்டிங் செய்தது.

( 2019ஐ கண்ணில் காட்டி! குலை நடுங்க வைத்த நியுசிலாந்து! மேட்ச் மாறிய அந்த நொடி! இந்தியா வென்றது எப்படி)

பவுலிங்: அதன்பின் பவுலிங்கில்தான் இந்திய அணி கடுமையாக திணறியது. தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.

ரோஹித் சர்மா பேச்சு: இவர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. ஒரு ரன் அவுட் மிஸ், ஒரு கேட்ச் மிஸ்..பல இடங்களில் பீல்டிங் மிஸ் என்று மிக மோசமாக இந்திய அணி ஆடியது. பவுலிங்கும் மிக மோசமாக இருந்தது.

How Rohit Sharma pep talk helped team India against New Zealand in Thrilling Semi Finals?

இந்த நொடியில்தான் எல்லோரையும் அழைத்து ரோஹித் சர்மா பேசினார். எல்லோரையும் அழைத்து அவர் பெப் டாக் கொடுத்தார். அவர் கொடுத்த பெப் டாக்தான் ஆட்டத்தை மாற்றியது. அதன்பின் மீண்டும் பவுலிங் போட வந்த ஷமி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார்;.

கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார். அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+