Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2019ஐ கண்ணில் காட்டி! குலை நடுங்க வைத்த நியுசிலாந்து! மேட்ச் மாறிய அந்த நொடி! இந்தியா வென்றது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியூஸிலாந்திற்கு எதிரான செமி பைனல் உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. இதன் மூலம் 2023 உலகக் கோப்பை பைனலுக்கு இந்திய அணி சென்றுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டம் இந்த தொடரில் இதுவரை இல்லாத விறுவிறுப்பை எல்லாம் சேர்த்து வைத்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்தியா என்னதான் டாஸ் வென்றாலும்.. முதலில் பேட்டிங் செய்தாலும்.. ஏன் பிட்ச் கூட இந்திய அணிக்கு கொஞ்சம் பழக்கமாக இருந்தாலும் கூட.. ஆட்டத்தில் இந்திய அணி ஒன்றும் எளிதாக எல்லாம் வென்றுவிடவில்லை.

தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் போக போக சரியில்லை என்று சொல்லும் அளவிற்குத்தான் இந்திய அணிக்கு ஏகப்பட்ட பிரஷர் இந்த ஆட்டத்தில் இருந்தது. ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக சென்ற நிலையில் நியூசிலாந்து பேட்டிங்கில் இந்திய அணிக்கு கடும் பிரஷர் போட்டது.

How did Team India win the semi Final match against New Zealand? What happened in the match?

அணி விவரம்; நேற்று ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் இடம் பெற்று இருந்தனர்., இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இன்னொரு பக்கம் டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தனர்.,

( பிரச்சனையாகிடும்! வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தும்.. கொண்டாடாமல் அமைதியாக இருந்த ஷமி.. என்ன காரணம்?)

இந்தியா பேட்டிங்: இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம். பந்து அதிகம் ஸ்விங் ஆகும். பனி காரணமாக பந்து வழுக்கினாலும் கூட பேட்டிங் செய்வது கடினம். இதனால் இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதன்பின்பும் 6.5 ரன் ரேட்டிற்கு குறையாமல் ஆடியது இந்திய அணி.

ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் சிக்ஸ், பவுண்டரி என்று ஆடினார். தொடக்கத்திலேயே 4 சிக்ஸ், 4 பவுண்டரி என்று ஆடினார். வெறும் 29 பந்தில் 47 ரன்களை ரோஹித் சர்மா எடுத்தார். இன்னொரு பக்கம் 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ரிட்டயர்ஹட் ஆகி கடைசி வரை களத்திலும் இருந்தார்.

How did Team India win the semi Final match against New Zealand? What happened in the match?

அதே சமயம் ஒரு பக்கம் கோலி 113 பந்தில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி அடித்து 117 ரன்கள் எடுத்தார். 50வது ஒருநாள் சதம் அடித்து புதிய சாதனையும் படைத்தார். சச்சின் மொத்தமாக 100 சதங்கள் அடித்துள்ளார். இதில் 49 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து வந்தது. 51 சதங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்தது . இப்போது விராட் கோலி 29 டெஸ்ட் போட்டி சதங்களை அடித்துள்ளார். அதேபோல் 1 டி 20 சதம் அடித்துள்ளார். அதோடு நிற்காமல் 50 ஒருநாள் சதம் அடித்துள்ளார். மொத்தமாக 80 சதம் அடித்துள்ளார்.

கோலி சச்சினின் மொத்த சதங்களாக 100 ஐ முறியடிக்க இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும். இதில் இன்னும் 3-4 வருடங்கள் கோலி ஆடும் வாய்ப்புகள் உள்ளன. கோலி இதே பார்மில் தொடரும் பட்சத்தில் சச்சினின் இந்த சாதனையையும் முறியடிக்க முடியும். அவர் இருக்கும் பிட்னஸ் காரணமாக கண்டிப்பாக இதே பார்மில் தொடரும் வாய்ப்புகள் உள்ளன.

( சச்சின் காலில் விழு கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் உண்மையில் நடந்தது என்ன? வெளியான பரபர பின்னணி )

ஷ்ரேயாஸ் ஐயர்: இதை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். வெறும் 70 பந்தில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து 105 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 50 ஓவரில் 397-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து இறங்கி தற்போது பேட்டிங் செய்தது.

How did Team India win the semi Final match against New Zealand? What happened in the match?

நியூசிலாந்து பேட்டிங்: இதில் தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.,

திணறிய இந்திய அணி: ஆனால் அதன்பின் ஷமி, டெரில் மிட்சல் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அதிலும் இடையே இடையே சிக்ஸர், பவுண்டரி என்று அடித்து இந்திய அணிக்கு பிரஷர் போட்டனர். 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார். பும்ரா வீசிய 29வது ஓவரின் 5வது பந்தில் ஷமி தன்னிடம் வந்த கேட்சை அப்படியே விட்டார் . 52 ரன்களில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை விட்டார். லாவகமாக கைக்கு, மிட் ஆஃப் திசையில் வந்ததை முகமது ஷமி மிஸ் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முக்கியமாக 2019 உலகக் கோப்பை செமி தோல்வியை நியூசிலாந்து அப்படியே கண் முன் நிறுத்தியது.

How did Team India win the semi Final match against New Zealand? What happened in the match?

ஆனால் அதன்பின் கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. அதுவரை நியூசிலாந்து கையில் இருந்த ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது.

டாம் லாதாம் விக்கெட்டை எடுத்த பின்புதான் ஷமி நிம்மதி அடைந்தார். பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார். அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இதன் மூலம் ஷமி இந்த மேட்சிலும் 5 விக்கெட் தாண்டி அசத்தினார். நேற்று மேட்சில் அவர் 7 விக்கெட் ஹவுல் எடுத்தார். இவர்தான் நேற்று மேட்சையே புரட்டி போட்டார். ஒரு கேட்ச் விட்டாலும்.. ஆட்டத்தை மாற்றியதே இவர்தான். இதனால் 327-10 ரன்கள் எநியூசிலாந்து எடுக்க 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+