Ind vs NZ: 7150 கிமீ பயணித்த நியூசிலாந்து! 0 கிமீ பயணித்த இந்தியா! இது என்ன நியாயம்! புது சர்ச்சை
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், அதில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியா அணி ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதே வெற்றிக்குக் காரணம் என இப்போது மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இன்றைய தினம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30க்கு தொடங்குகிறது. இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்திலேயே விளையாடுவது தொடக்கம் முதலே சர்ச்சையாக இருந்து வருகிறது. இதனால் பலரும் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் மற்ற அணிகள் போட்டி முடிந்த கையோடு வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டும். இதுபோல போட்டிகளுக்கு இடையே ஒவ்வொரு ஊர்களுக்கும் பயணிக்க வேண்டி இருக்கும். ஆனால், இந்தியாவுக்கு அப்படி இல்லை. துபாயில் போட்டி முடிந்தவுடன் நேராக ஹோட்டலுக்கு போய்விடலாம்.. பிறகு நேரடியாக அடுத்த போட்டிக்கு வந்தால் போதும்.. பயணம் செய்யவே தேவையில்லை.
இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இது தொடர்பாகக் கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முதல் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது என்பதை ஒப்பிட்டு அவர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
7,150 கி.மீ vs 0 கிமீ
இது தொடர்பாக ஜுனைத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "2025 சாம்பியன்ஸ் டிராபியில் போட்டிகளுக்கு இடையே அணிகள் பயணித்த தூரம்.. நியூசிலாந்து: 7,150 கி.மீ.. தென்னாப்பிரிக்கா: 3,286 கி.மீ.. இந்தியா: 0 கி.மீ.. சில அணிகள் திறமையால் வெற்றி பெறுகின்றன, சில அணிகள் போட்டியை நடத்தும் இடத்தால் வெற்றி பெறுகின்றன" என்று கூறி சலசலப்பை உருவாக்கியுள்ளார்.
இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் பயணம் தேவையில்லை என்ற ஒரு அட்வான்டேஜ் மட்டும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருப்பது உண்மை தான். ஆனால், அதற்காக இந்தியாவுக்கு எந்தவொரு திறமையும் இல்லை.. ஒரே இடத்தில் போட்டி நடைபெறுவதாலேயே இந்தியா வெல்கிறது என்று சொல்வது எல்லாம் துளியும் ஏற்க முடியாது என நெட்டிசன்கள் இதற்குப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
டேவிட் மில்லர்
அதேநேரம் இது தொடர்பாக விமர்சனம் எழுவது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே சிலர் இது தொடர்பாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டெவிட் மில்லரும் கூட இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் துபாய் இடையேயான விமான பயணம் என்பது குறுகியதுதான் என்றாலும் அடிக்கடி பயணிக்க வேண்டி இருந்ததாகவும் அது சரியான போக்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
கவுதம் கம்பீர்
இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடுகிறது.. மேலும், அதே மைதானத்தில் தான் பயிற்சியும் செய்கிறது.. இது இந்தியாவுக்குப் பெரியளவில் சாதகமாக அமைகிறது என்ற விமர்சனத்தைச் சிலர் முன்வைத்திருந்தனர். அதற்குப் பதிலடி கொடுத்த இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், "அதென்ன அட்வான்டேஜ்.. நாங்கள் ஐ.சி.சி அகாடமியில் தான் பயிற்சி செய்கிறோம். அங்குள்ள சூழலுக்கும் மைதானத்தில் உள்ள சூழலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது" எனக் கூறியிருந்தார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications