நீதான் இனி.. 6 மாதங்களுக்கு முன் வார்த்தையைவிட்ட ரோஹித் சர்மா.. சொல்லி வைத்து பதிலடி கொடுத்த சிராஜ்!
லண்டன்: பழைய பந்தில் முகமது சிராஜ் பவுலிங் செய்யும் போது பெரிய தாக்கம் என்று ரோஹித் சர்மா விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதே பழைய பந்தில் முகமது சிராஜ் மேஜிக் செய்து பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் ரோஹித் சர்மா கண்முன்பாகவே சிராஜ் இந்திய அணியை வெற்றிபெற வைத்திருப்பது அவரின் கருத்துக்கும் பதிலடியாக அமைந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா காயம் அடைந்த போது, முகமது சிராஜை இந்திய அணியில் சேர்க்கவில்லை. இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ட போது, புதிய பந்தில் முகமது சிராஜால் நன்றாக ஸ்விங் செய்ய முடியும். ஆனால் பந்து கொஞ்சம் பழையதாக மாறிவிட்டால், அவரின் பவுலிங்கில் கொஞ்சம் கூட தாக்கம் இல்லை என்று கூறி இருந்தார்.

சொந்த அணியைச் சேர்ந்த வீரரையே ஒரு கேப்டன் இப்படி விமர்சித்தது ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தைப் பெற்றது. இதனால் முகமது சிராஜின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வருமோ என்று பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். அதற்கேற்ப ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முகமது சிராஜின் பவுலிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
ஆனால் அதற்கும் சேர்த்து இங்கிலாந்து மண்ணில் முகமது சிராஜ் தனது விக்கெட் வேட்டையையும் நடத்தி இருக்கிறார். 5 போட்டிகளில் விளையாடிய முகமது சிராஜ் மொத்தமாக 23 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 1,113 பந்துகளை மொத்தமாக சிராஜ் வீசியுள்ளார். வேறு எந்த பவுலிரும் இந்த அளவிற்கு இந்த டெஸ்ட் தொடரில் பவுலிங் செய்யவில்லை.
அதுமட்டுமல்லாமல் பும்ரா விளையாடாத 2 போட்டிகளிலும் முகமது சிராஜ் பொறுப்பை உணர்ந்து பவுலிங் செய்துள்ளார். இந்த நிலையில் ரோஹித் சர்மா கண் முன்பாக முகமது சிராஜ் இந்திய அணிக்கு இந்த வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்திற்குப் போட்டியைப் பார்க்க வந்த ரோஹித் சர்மா, முகமது சிராஜின் பவுலிங்கை கண்டு மிரண்டு போனார்.
இந்த போட்டி முடிவடைந்து கொண்டாட்டங்கள் ஓய்ந்த பின், மைதானத்திற்குள் இறங்கிய ரோஹித் சர்மா நேராக சென்று முகமது சிராஜை கட்டியணைத்துப் பாராட்டி இருக்கிறார். எந்த பழைய பந்தில் சிராஜின் பவுலிங் தாக்கம் இல்லை என்று ரோஹித் சர்மா சொன்னாரோ, அதே பழைய பந்தை வைத்து சிராஜ் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ரோஹித் சர்மா கண்முன் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வாயில் இருந்து, கேப்டனின் கனவு பவுலர் சிராஜ் என்று சொல்ல வைத்திருக்கிறார். இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான்களும் பாராட்டி தள்ளி வருகின்றனர். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், நாசர் ஹுசைன், மைக்கில் வாஹன் உள்ளிட்ட அனைவரும் சிராஜ் ஆட்டம் பிரமிப்பை அளிப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications