அபிஷேக் சர்மா அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் அல்ல.. அவுட் செய்ய இதுதான் டெக்னிக்.. சொல்லி கொடுத்த ஆமிர்!
கொழும்பு: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற நுட்பத்தை பாகிஸ்தான் பவுலர்களுக்கு முன்னாள் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார். அபிஷேக் சர்மாவிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இல்லை என்று கூறிய அவர், டீப் கவரில் ஃபீல்டரை நிறுத்தி உடலை நோக்கி பவுலிங் செய்தால் தடுமாறுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. இந்தப் போட்டி நிச்சசயமாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்ற போது, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் கோப்பையை கூட வழங்கவில்லை.

இந்த ஆட்டத்திற்கு பின் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து அபிஷேக் சர்மா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்னும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அபிஷேக் சர்மாவை குறி வைத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமிர் விமர்சித்துள்ளார். முகமது ஆமிர் பேசுகையில், அபிஷேக் சர்மா ஒரு ஸ்லாக்கர்.. அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் கிடையாது. அவரிடம் நல்ல பேட்டிங் டெக்னிக்கும் இல்லை.. அத்தனை பந்துகளையும் சிக்ஸ் அடிக்க முயற்சிப்பார்.
8 இன்னிங்ஸ்களில் ஆடினால், ஒரு போட்டியில் மட்டுமே ரன்களை குவிப்பார். அதிரடியாக மட்டுமே விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கில் ஆபத்து அதிகம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை டீப் கவரில் ஃபீல்டரை நிறுத்தி, அவரின் உடல் நோக்கி பந்துவீசலாம். அதேபோல் கொஞ்சம் வேகம் குறைந்த பந்துகளுக்கும் தடுமாறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அபிஷேக் சர்மா நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். உச்சக்கட்ட ஃபார்மில் இல்லையென்றாலும், எந்த நேரத்தில் விளாசி தள்ளுவார் என்பதை கணிக்கவே முடியாது. அதேபோல் எவ்வளவு பெரிய மைதானம் என்றாலும், எளிதாக சிக்சர்களை விளாசக் கூடிய வீரராக இருக்கிறார். இதனால் அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் அணி வேண்டுமென்றே குறி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications