சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட காயம்.. மீண்டும் கேப்டனாகும் ஹிட்மேன்? ரேஸில் இருக்கும் 3 பெயர்கள்!
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலக வேண்டியா நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நவம்பர் 30 முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கவுகாத்தி வந்திருக்கும் சூழலில், ஆர்பி சிங் மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் ஆகியோரும் நாளை வரவுள்ளனர். இதன்பின் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு நடக்க உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், உடனடியாக இந்திய அணி அறிவிக்கப்படலாம்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்தே விலகி இருக்கிறார். அவர் இன்னும் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டி20 தொடருக்கு தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன்சியை ரோகித் சர்மாவிடம் கொடுக்கலாமா என்று தேர்வுக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் இருக்கிறார். இதனால் ரோகித் சர்மா அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவரை கேப்டனாக்க ஆலோசனை நடந்து வருகிறது.
அதேபோல் ரிஷப் பண்ட், அக்சர் படேல் ஆகியோரின் பெயர்களும் கேப்டன்சிக்கான ரேஸில் இருக்கின்றன. ஏனென்றால் இந்திய அணியின் டாப் ஆர்டர் முழுவதும் வலதுகை பேட்ஸ்மேன்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நம்பர் 4 வரிசையில் ரிஷப் பண்ட் அல்லது திலக் வர்மா ஆகியோரை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications