சுப்மன் கில்லுக்கு சமமாக நிற்கும் சூர்யகுமார் யாதவ்.. இனி இந்திய அணியை யாராலும் காப்பாற்ற முடியாது!
மும்பை: இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் தொடர்ச்சியாக 18 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் ரன் பிரஷர் எதுவும் இல்லாத சூழலிலும் கூட, சுப்மன் கில் 28 பந்துகளுக்கு 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 12 ரன்களிலும், துணைக் கேப்டன் சுப்மன் கில் 28 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் சுப்மன் கில் 5 பவுண்டரிகளை வேறு அடித்திருக்கிறார். அப்படியென்றால் சுமார் 15க்கும் அதிகமான பந்துகளை சுப்மன் கில் டாட் பால்களாக விளையாடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான ரன் அழுத்தம் ஏற்படவில்லை. குறிப்பிட்ட ரன் ரேட்டில் விளையாட வேண்டும் என்ற தேவையும் ஏற்படவில்லை. இதனால் இந்தப் போட்டியை சுப்மன் கில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்தது. ஆனால் சுப்மன் கில்லோ தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று சேட்டையை காட்டி இருக்கிறார்.
இதன் மூலமாக 18 இன்னிங்ஸ்களாக தொடர்ந்து அரைசதம் அடிக்காத தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே நிரூபிக்காத வீரர்களுக்கு 18 இன்னிங்ஸ்களில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டதில்லை. ஆனாலும் இந்திய அணி நிர்வாகம் சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் என்பது நிச்சயம்.
அதேபோல் துணைக் கேப்டனுக்கு போட்டியளிக்கும் விதமாக கேப்டன் சூர்யகுமார் யாதவும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி 10 இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications