India Pakistan: இந்தியா - பாகிஸ்தான்.. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா? கவாஸ்கர் சொல்வது இதுதான்
சென்னை: (இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் India Pakistan Match): 17-வது ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இவ்விவகாரத்தில் அரசின் முடிவையே இந்திய அணியும் பிசிசிஐயும் பின்பற்றும் என்று கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் உலகின் பரம வைரிகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2012 டிசம்பர் - 2013 ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. அதற்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது இல்லை. எனினும், ஐசிசி நடத்தும் போட்டிகளிலும் பன்னாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் மோதிக்கொள்கின்றன.

இந்தியா பாகிஸ்தான் போட்டி
அந்தவகையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா துண்டித்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சிவசேனா, ஆம் ஆத்மி கட்சிகள் எதிர்ப்பு
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கூடாது என்று உத்தவ் சிவசேனா, டெல்லி ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போட்டியை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இந்த விவகாரத்தில், இந்திய அணி பிசிசிஐ மற்றும் இந்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற மட்டுமே செய்கிறது என்றும், போட்டி நடக்குமா என்பதில் முடிவு செய்வதில் எந்த பங்கும் அணிக்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு தான் முடிவு எடுக்கும்
இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- "கடைசியில் அரசு தான் இதில் முடிவு எடுக்கும். அரசு என்ன முடிவு செய்கிறதோ அதை பிசிசிஐயும், வீரர்களும் பின்பற்றுவார்கள். இதுதான் நடக்கப்போகிறது. நாம் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில், அரசின் முடிவுதான். இந்த விவகாரத்தில் அதுதான் நடக்கப்போகிறது." என்றார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 17-வது ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த முறை 'ஏ' பிரிவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுத்து வரும் நிலையில் தான், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications