கருண் நாயர் இடத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு? இறுதியாக ஒரு முடிவை எடுத்த கம்பீர்.. சம்பவம் உறுதி!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்க உள்ளது. இதில் நம்பர் 3ல் களமிறங்கி வரும் கருண் நாயர் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் மோதுகின்றனர்.

லார்ட்ஸ் மைதான வரலாறு
கடைசியாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 பயணங்களில் 3 முறை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் வென்றுள்ளது. அதில் கடந்த முறை 60 ஓவர்களில் நரகத்தை காட்ட வேண்டும் என்று விராட் கோலி செய்த சம்பவத்தை எந்தவொரு இங்கிலாந்து ரசிகராலும் மறக்கவே முடியாது. இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.
பும்ரா ஆடுவது உறுதி
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா கம்பேக் கொடுக்க உள்ளார். இதனால் இந்திய அணியில் எத்தனை மாற்றங்கள் இருக்கும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக நிச்சயம் பும்ரா கொண்டு வரப்படுவார்.
வாஷிங்டன் சுந்தர் நீக்கம்?
லார்ட்ஸ் மைதானத்தை பொறுத்தவரை 2 ஸ்பின்னர்களின் தேவை இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஜடேஜாவை வைத்துக் கொண்டு வாஷிங்டன் சுந்தரை கம்பீர் கழற்றிவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தொடக்க வீரர்கள் மற்றும் நம்பர் 4ல் களமிறங்கும் சுப்மன் கில்லின் அபார ஆட்டம் காரணமாக நம்பர் 3ல் வரும் கருண் நாயர் கடந்த போட்டியில் தப்பித்துவிட்டார்.
77 ரன்கள்
"டியர் கிரிக்கெட் ப்ளீஸ் இன்னொரு வாய்ப்பு கொடு" என்று எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு, 8 ஆண்டு இடைவெளிக்கு பின் கருண் நாயர் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் ஆடிய 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 77 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் 2 நல்ல இன்னிங்ஸை ஆடிய பின், கருண் நாயரின் ஃபார்ம் மோசமாகவே இருந்தது.
கருண் நாயருக்கு வாய்ப்பு?
இதனால் கருண் நாயரின் இடத்திற்கு சாய் சுதர்சன் கொண்டு வரப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் அவ்வளவு எளிதாக வெற்றிக் கூட்டணியை மாற்ற மாட்டார். இதனால் 3வது போட்டியில் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டியிலும் சொதப்பினால், இதுவே அவருக்கான கடைசி வாய்ப்பாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications