10 மேட்ச் வரிசையா ஜெயிச்சாரே.. 5 கப்பு வேற.. ரோஹித் சர்மாவிற்கு ஆப்படிக்கும் மும்பை இந்தியன்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் இந்திய டி 20 கேப்டன்சியை இழக்கும் ரோஹித் சர்மா.. மும்பை அணியின் கேப்டன்சியையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியாவின் சிறப்பான உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது. வரிசையாக 10 போட்டிகளில் கூட இந்திய அணி வென்றது.

IPL 2024 Retention: Is Rohit Sharma losing captaincy to Hardik Pandya after the transfer?

ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

டி 20 தொடர்: இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி ஆடி வருகிறார். முதல் முறையாக டி20 அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சிலரைத் தவிர உலகக் கோப்பை அணியில் மற்ற பெரும்பாலானோர் ஓய்வில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய். , அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (கடைசி இரண்டு போட்டிகளில்) ஆடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெசேஜ்; இந்த நிலையில்தான் 2023 உலகக் கோப்பை முடிந்த நிலையில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை பிசிசிஐ அனுப்பி உள்ளதாம். அதன்படி இவர்கள் இருவரையும் இனி டி 20 அணியில் எடுக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இனிமேல் இவர்களுக்கு அணியில் வாய்ப்பு தரப்படாது என்று பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிகின்றன. எனவே டி 20 போட்டிகளில் ரோஹித் சர்மா இனிமேல் கேப்டனாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

இன்னொரு கெட்ட செய்தி: இன்னொரு பக்கம் ரோஹித் சர்மாவிற்கு இன்னொரு கெட்ட செய்தி சென்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

ஒரு பக்கம் இந்திய டி 20 கேப்டன்சியை இழக்கும் ரோஹித் சர்மா.. மும்பை அணியின் கேப்டன்சியையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதோ என்று தோன்றுகிறது. 2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+