நைட் வாட்ச்மேனை இறக்க இது டெஸ்ட் கிரிக்கெட்டா.. சிஎஸ்கே செய்த கொடும் தவறுகள்.. தோனியா இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி இன்றும் மிக மோசமாக ஆடி உள்ளது. அதிலும் கேப்டன் தோனி இன்று மிக கொடுமையான தவறுகளை கேப்டனாக இன்று களத்தில் செய்தார்.

இன்று ஆடிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

கொல்கத்தா அணியில் குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

IPL 2025 CSK played another worst match against Kolkata KKR today

மோசமான பேட்டிங்

கொல்கத்தா - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறையும் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை எடுத்து சொதப்பினார். அதோடு 11 பந்தில் 12 ரன்களை எடுத்து கான்வே அவுட் ஆனார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

21 பந்தில் விஜய் சங்கரும் மோசமாக ஆடி 29 ரன்கள் எடுத்தார். 7 பந்துகள் குடித்த அஸ்வின் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா டக் அவுட். தோனி 1 ரன்னுக்கு அவுட் என்று அதிர்ச்சி கொடுத்தனர். முதல் 8 ஓவர்களிலேயே சிஎஸ்கே 24 பந்துகளை டாட் வைத்தது. இடையில் தேவையின்றி இறக்கப்பட்ட ஹூடா டக் அவுட் ஆனார். இப்படி இறங்கிய வீரர்கள் எல்லோரும் மோசமாக ஆடி சொதப்பினார்.

இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. டி காக் 23 ரன்களை எடுத்தார். சுனில் நரேன் 44 ரன்களை எடுத்தார். இதனால் எளிதாக இலக்கிற்கு அருகே சென்ற கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து வென்றது,

தவறுகள்

கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி இன்றும் மிக மோசமாக ஆடி உள்ளது. அதிலும் கேப்டன் தோனி இன்று மிக கொடுமையான தவறுகளை கேப்டனாக இன்று களத்தில் செய்தார்.

1. இன்று இம்பாக்ட் வீரராக தேவையின்றி தீபக் ஹூடா சம்பந்தமே இல்லாமல் இறக்கப்பட்டார். இதனால் பத்திரனா இறக்கப்படாமல் போன நிலை ஏற்பட்டது.

2. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சென்ற போது அஸ்வின் இறக்கப்பட்டார். டெஸ்ட் ஆட்டம் போல.. அஸ்வின் நைட் வாட்ச் மேன் ஆக இறக்கப்பட்டார்.

3. தேவையின்றி எப்படி தீபக் ஹூடா உள்ளே வந்தார் என்ற சந்தேகம் இருந்தது.

4. ஜடேஜாவிற்கு முன் அஸ்வினுக்கு ஓவர் தரப்பட்டது. அவர் இன்று ஓவர் தி விக்கெட் போட்டார். கேரம் பால் அதிக வீசினார். மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான முதல் இரண்டாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 2 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 22 ரன்கள் கொடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 46 ரன்கள் கொடுத்தார்.

டெல்லிக்கு எதிரான நான்காவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 3 ஓவர்கள் 21 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பஞ்சாப்பிற்கு எதிரான ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 2 விக்கெட் எடுத்தார் 48 ரன்கள் கொடுத்தார். சிஎஸ்கே அணியில் ஆடி வரும் மூத்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் மீது கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. அஸ்வின் சரியாக ஆடவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

நூர் அஹமது இன்றும் பவர் பிளேவில் பவுலிங் போட அனுமதிக்கப்படவில்லை. இன்று கேப்டன்சியை பார்க்க உண்மையில் இது தோனி செய்த கேப்டன்சியா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+