அணியை கலைக்க வேண்டிய நிலை.. சிஎஸ்கே டீமிற்கு வந்த பெரிய சிக்கல்.. அடித்து சொன்ன ஆஸ்திரேலிய வீரர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவேளை அணியில் பலரை நீக்கி கிட்டத்தட்ட அணியை கலைக்க வேண்டிய நிலை வரலாம். புதிய ரத்தத்தை செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது என்று சிஎஸ்கே அணியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வைத்த விமர்சனத்தில், சென்னை ஆட்டத்தை அணுகிய விதத்தில், வெற்றிக்கான எந்த நோக்கமும் இல்லை. அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்பது தெளிவாகிறது, வெற்றிக்காக அல்லாமல் வெறுமென ஏதாவது ஸ்கோர் அடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

IPL 2025 CSK

ஆனால் சில நேரங்களில், நீங்கள் அடித்து ஆட வேண்டும். தோல்வியை பற்றி யோசிக்காமல் இன்டன்ட் உடன் ஆட வேண்டும். ரிஸ்க் எடுங்கள். அப்படி செய்தால்தான் நீங்கள் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன. நம்பிக்கையோடு ஆட வேண்டும். நல்லது அல்லது கெட்டது பற்றி யோசிக்காமல் கிரிக்கெட்டை பற்றி யோசித்து ஆடுங்கள். தோல்வியை தவிர்க்க வேண்டும் என்று ஆடினால்.. வெற்றி தான் வேண்டும்.

ஒருவேளை அணியில் பலரை நீக்கி கிட்டத்தட்ட அணியை கலைக்க வேண்டிய நிலை வரலாம். புதிய ரத்தத்தை செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது. நம்பிக்கைக்குரிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆண்ட்ரே சித்தார்த் போன்ற வீரர்கள் வாய்ப்புக்கு தகுதியானவர்கள். திரிபாதி மற்றும் ஹூடாவைப் பார்த்துவிட்டோம். இனி அவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது. புதிய முகங்கள் அணிக்கு தேவையான தீப்பொறியைக் கொண்டுவருவதற்கான நேரம் இது. ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் கூட அணியின் மனநிலையை மாற்றலாம், என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் கூறி உள்ளார்.

தொடர் தோல்வி

சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் சீசனில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.

மேட்ச் 1

ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது. சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,. ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேட்ச் 2:

மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது. இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.

மேட்ச் 3:

மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது. இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது . கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.

மேட்ச் 4:

ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது. இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

மேட்ச் 5

முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இப்படி 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+