யாரை டீமிலிருந்து ஒதுக்குனீங்க! சொல்லி சொல்லி அடித்த ருத்துராஜ்! மும்பையை சிஎஸ்கே வென்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நிலையில் திரில் ஆட்டத்தில் கடைசியில் மும்பை வீழ்த்தி வென்றது.

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விதம் கவனம் பெற்றது. தொடக்கத்திலேயே கலீல் அஹமது ஓவரில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவர் டக் அவுட் ஆன நிலையில் அந்த ஓவருக்கும் அடுத்த ஓவரிலேயே ரியான் ரிக்கல்டன் விக்கெட்டை கலீல் எடுத்தார். அவரிடம் எனர்ஜி ஷிப்ட் தெரிந்தது .

சிஎஸ்கே சிறப்பான பவுலிங்

ஹைதராபாத் , டெல்லி அணிகளுக்கு ஆடிய போது கூட அவர் இவ்வளவு சிறப்பாக ஆடியது இல்லை. ஆனால் பவர் பிளேவில் அவர் ஆடிய விதம் கவனிக்கப்பட்டது. அதோடு அஸ்வின் இடையே வந்து வில் ஜாக்ஸ் விக்கெட்டை எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களுக்கு பின் போட்ட முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட் எடுத்தது கவனிக்கப்பட்டது.

முக்கியமாக மிடில் ஆர்டரை நூர் அஹமது அப்படியே பதம் பார்த்தார். 10 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட அவர் மிடில் ஆர்டரை நிற்க வைத்து விக்கெட் எடுத்தார். சவப்பெட்டியில் அடிக்கப்படும் ஆணி போல அவர் அடுத்தடுத்து ஆணி அடித்து மும்பை அணியை திணற அடித்தார். மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணியை துவம்சம் செய்தார்.

சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால்தான் நூர் எடுக்கப்பட்டார். அதன்படியே இன்று 87-4 (சூர்யகுமார் யாதவ், 10.3), 95-5 (ராபின் மின்ஸ், 12.4), 96-6 (திலக் வர்மா, 12.6), 118-7 (நமன் திர், 16.1) ஆகிய முக்கியமான விக்கெட்டுகளை அவர் எடுத்து அசத்தினார். இன்று பவுலிங்கில் சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் அவர்தான்.

அணியின் மொத்த ஆட்டத்திலும் கடுமையான எனர்ஜி ஷிப்ட் இன்று தெரிந்தது. தோனியிடமும் பழைய வேகம் அப்படியே இருந்தது. 11 ஓவரில் இன்று நூர் பவுலிங் செய்த போது கீப்பிங்கில் தோனி கொஞ்சம் சொதப்பினார். கைக்கு வந்த பந்தை மிஸ் செய்தார். இதனால் அந்த பந்து பவுண்டரி போனது. அதை பார்க்க.. தோனி ஸ்லோ ஆகிவிட்டார் என்று சொல்ல தோன்றியது.

IPL 2025 How did CSK win the match against Mumbai Indians

ஆனால் அதே ஓவரிலேயே சூர்ய குமார் யாதவை தோனி ஸ்டம்பிட் செய்தார். அதிலும் 1 நொடிக்கும் குறைவாக.. மில்லி செகண்ட் வேகத்தில் தோனி அந்த ஸ்டம்பிட்டை எடுத்தார். அதன்பின்பு இறங்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 20 ஓவரில் மும்பை அணி 155/9 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே கலக்கல்

அதன்பின் இறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே டாப் கியரில் போனது. டி 20 உலகக் கோப்பை , சாம்பியன்ஸ் கோப்பை என்று எதிலும் ருத்துராஜ் எடுக்கப்படவில்லை. இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று தொடக்கத்தில் இருந்தே ருத்துராஜ் விளாசினார். வெறும் 26 பந்தில் 53 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்கு தேவையான தொடக்கத்தை கொடுத்தார். இதில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார்.

ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சிவம் துபே, சாம் கரண் என்று இறங்கிய எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அணியின் சரிவை உணர்ந்த ரச்சின் ரவீந்திரா தொடக்கத்தில் வேகமாக ஆடியவர் கியரை குறைத்து நிதானமாக ஆடினார். 16 ஓவர்களில் சென்னை 125-5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் விறுவிறுப்பானது. தோனி எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம் என்ற சூழல் நிலவியது.

ஆனால் ரவீந்தர் ஜடேஜா, ரச்சின் ரவீந்தர் என்று இரண்டு ரவீந்தர்களும் கடைசி கட்டத்தில் சிக்ஸ், பவுண்டரி என்று எடுத்து நம்பிக்கை கொடுத்தனர். முக்கியமாக 18வது ஓவரில் விக்னேஷ் புத்தூர் ஓவரில் 2 சிக்ஸ் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் மாற்றினர். கடைசியில் இக்கட்டான நேரத்தில் ஜடேஜா ரன் அவுட் ஆன நிலையில் எதிர்பார்த்தபடியே நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடலோடு.. தோனி கடைசி கட்டத்தில் களமிறங்கினார். 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நேரத்தில் தோனி களமிறங்கினார். ஆனால் கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+