CSK vs RCB: நம்ம மட்டுமல்ல.. பங்காளி மும்பையும் பலவீனமா தான் இருக்கு.. காரணமே அதுதான்!
மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணியின் ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இருந்தாலும் சக பங்காளிகளான மும்பை அணியும் பலவீனமாக இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுடையே ஆறுதல்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று 3 துறைகளும் மோசமாக இருந்தன. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். அதேபோல் சிஎஸ்கே அணிக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயமாக மும்பை அணியும் பலவீனமாக இருக்கிறது.

மும்பை அணியை ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த அணியின் பும்ராவை சுற்றி பவுலிங் வரிசை கட்டமைக்கப்பட்டது. ஆனால் பும்ராவே காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதுவரை என்சிஏவில் மருத்துவ சிகிச்சையை மட்டுமே பும்ரா எடுத்து வருகிறார். இன்னும் பவுலிங் பயிற்சியையே தொடங்கவில்லை.
இதனால் ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் பும்ரா மும்பை அணிக்காக விளையாடுவது சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் போல்ட் மற்றும் தீபக் சஹர் ஆகியோரை சுற்றியே பவுலிங் செய்ய வேண்டிய நிலைக்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே டெத் ஓவர்களில் மோசமாக செயல்படக் கூடியவர்கள் என்பதால், ஹர்திக் பாண்டியாவே பந்தை கையில் எடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் எதிரணிகளால் விளாசப்பட்டிருக்கிறார். இதனால் மும்பை அணி டெத் ஓவர்களில் பவுலிங் செய்வதற்கு வீரர்கள் இல்லாமல் திணறி வருகிறது. அதேபோல் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
வழக்கமாக ஆர்சிபி அணியின் நிலையை கண்டு சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருவார்கள். ஆனால் இம்முறை தலைகீழாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணியை நினைத்து ஆர்சிபி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் இந்த ஐபிஎல் தொடர் கூடுதல் சுவாரஸ்யமாகி இருக்கிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications