அமெரிக்க அதிபரே மாறிட்டாரு.. ஆனா ஆர்சிபி பவுலிங் மாறல பாருங்க.. மேட்சில் எதிர்பார்க்காத சம்பவம்!
கொல்கத்தா: ஐபிஎல் 2025 சீஸனின் முதல் ஆட்டம் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் கையில் இருந்த பவர் பிளேவை சொதப்பி.. ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பி பெங்களூர் பவுலிங் சொதப்பியது. ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் பெங்களூர் பவுலிங் கொல்கத்தாவை கட்டுப்படுத்தியது.
கொல்கத்தா அணியில் இன்று குயின்டன் டி காக), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமந்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
பெங்களூர் அணியில் விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இதில் முதல் 3 இவர்களை பெங்களூர் அணி தங்கள் கண்ட்ரோலில் வைத்து இருந்தது. 3 ஓவர்கள் முடிவில் வெறும் 9-1 ரன்கள் எடுத்து கொல்கத்தா திணறி வந்தது. ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோரை வைத்து பெங்களூர் அணி பிரஷர் கொடுத்தது.
பெங்களூர் மோசம்
எதிர்க்க ஆடுறது யாராக இருந்தால் என்ன பவுலிங் போடுறது நம்ம பெங்களூர்மா என்று சொல்லும் அளவிற்கு பெங்களூர் அணியின் பவுலிங் சொதப்ப தொடங்கியது. படிதார் சம்பந்தமே இல்லாமல் திடீர் என்று ரசிக் தார் சலாம் கையில் ஓவரை கொடுத்தார். அந்த ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரியே என்று ஆட்டத்தை மாற்றினார் ரஹானே. அதுவரை மெதுவாக போன ஆட்டம் கொல்கத்தா பக்கம் போனது.
அடுத்த ஓவரை ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோரிடம் கொடுக்காமல் குர்னால் பாண்டியாவிடம் கொடுக்க. அந்த ஓவரில் ரஹானே மீண்டும் அடித்து துவைத்தார். அப்போது கியரை மாற்றிய ரஹானே , சுனில் நரேன் கிட்டத்தட்ட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்தனர். ரஹானே 56, நரேன் 44 ரன்கள் எடுத்து ஆட்டத்தை பெங்களூர் பக்கம் இருந்து கொல்கத்தா பக்கம் கொண்டு வந்தனர்.
மிடில் ஓவர்களில் 107-2 (சுனில் நரைன், 9.6), 109-3 (அஜிங்க்யா ரஹானே, 10.3), 125-4 (வெங்கடேஷ் ஐயர், 12.1) என்று கொஞ்சம் விக்கெட் விழுந்தது. ஆனாலும் கூட அது பெரிய அளவில் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடர்ந்து ரன் ரேட் 9க்கு குறையாமல் இருந்தது.
மீண்டும் பெங்களூர் கண்ட்ரோல்
ஆனால் மிடில் ஆர்டரில் மீண்டும் பெங்களூர் பவுலிங் கொல்கத்தாவை கட்டுப்படுத்தியது. மிடில் ஓவர்களில் 145-5 (ரிங்கு சிங், 14.6), 150-6 (ஆண்ட்ரே ரசல், 15.4) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் ஆட்டம் மீண்டும் பெங்களூர் பக்கம் வந்ததால்.. களம் சூடு பிடித்தது. சரியான பேட்டர்கள் டெத் ஓவர்களில் கொல்கத்தா திணற தொடங்கியது.
இதனால் 210 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ஓவரில் விக்கெட் 8 இழப்பிற்கு கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது.












Click it and Unblock the Notifications