கோபத்தில் கிளாஸை உடைத்த ரோஹித்.. ரிட்டயர் ஆகுங்க பாஸ்.. விளாசப்பட்ட ரோஹித் சர்மா.. என்ன ஆச்சு?
சென்னை: நேற்று சென்னைக்கு எதிராக நடந்த மேட்சில் மும்பை அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா ஆடிய விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி வென்றது.
நேற்று நடந்த சிஎஸ்கே மேட்சில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், எம்எஸ் தோனி , ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நேற்று மேட்சில் சென்னை பிட்சை ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர். முக்கியமாக அஸ்வின் - நூர் - ஜடேஜா எதிரணிக்கு கடுமையாக பிரஷர் போட்டனர். அதோடு அஸ்வின் இடையே வந்து வில் ஜாக்ஸ் விக்கெட்டை எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களுக்கு பின் போட்ட முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட் எடுத்தது கவனிக்கப்பட்டது. முக்கியமாக மிடில் ஆர்டரை நூர் அஹமது அப்படியே பதம் பார்த்தார். 10 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட அவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணியை துவம்சம் செய்தார்.

ரோஹித் சர்மா சொதப்பல்
நேற்று மேட்சில் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே டக் அவுட் ஆனார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விதம் கவனம் பெற்றது. தொடக்கத்திலேயே கலீல் அஹமது ஓவரில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவர் டக் அவுட் ஆன நிலையில் அந்த ஓவருக்கும் அடுத்த ஓவரிலேயே ரியான் ரிக்கல்டன் விக்கெட்டை கலீல் எடுத்தார். . இது மும்பை அணியை திணற வைத்தது.
ஆட்டத்திற்கு முன்பாக விளம்பரம் ஒன்றில் சிஎஸ்கே அணி பெயரை கேட்டதும்.. ரோஹித் சர்மா கிளாஸ் ஒன்றை உடைப்பது போல காட்சிகள் காட்டப்பட்டது. இந்த நிலையில் விளம்பரத்தில் நன்றாக நடிக்கிறீர்கள். இதை மேட்சிலும் செய்யுங்கள் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பல சீசன்களாக ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. அதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சிஎஸ்கே வெற்றி
ருத்துராஜ் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. அதோடு இல்லாமல் தோனி ருத்துராஜை வழிநடத்திய விதம்.. பீல்டர்களை நிற்க வைத்த விதம் கவனிக்கப்பட்டது. சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே டாப் கியரில் போனது. தொடக்கத்தில் இருந்தே ருத்துராஜ் விளாசினார். வெறும் 26 பந்தில் 53 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்கு தேவையான தொடக்கத்தை கொடுத்தார். இதில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சிவம் துபே, சாம் கரண் என்று இறங்கிய எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.
அணியின் சரிவை உணர்ந்த ரச்சின் ரவீந்திரா தொடக்கத்தில் வேகமாக ஆடியவர் கியரை குறைத்து நிதானமாக ஆடினார். நேற்று 45 பந்தில் ரச்சின் நிதானமாக அடித்த 65 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி வென்றது.












Click it and Unblock the Notifications