இவரெல்லாம் வீரரா? ஆடிக்கிட்டே இருந்தா எப்போ பேட்டிங் பண்ணுவீங்க.. சிஎஸ்கே வீரரை கிழித்த ஹர்பஜன் சிங்
சென்னை: சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர் ஒருவரை முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரராக ஆடி வரும் ராகுல் திரிப்பாதி மோசமாக சொதப்பிக்கொண்டு இருக்கிறார்.
வலது கை பேட்டரான ராகுல் சிஎஸ்கே அணிக்காக முதல் மூன்று போட்டிகளில் வெறும் 30 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஓப்பனிங் வீரரான இவர் பவர் பிளேவில் மிக மோசமாக சொதப்பி வருகிறார். பொதுவாக சிஎஸ்கே வீரர்கள் பவர் பிளேவில் பெரிதாக ஆட மாட்டார்கள். ஆனால் இவர் இருப்பதிலேயே மிக மோசமாக ஆடிக்கொண்டு இருக்கிறார். மெகா ஏலத்தில் 3.40 கோடி ரூபாய்க்கு CSK-ல் திரிபாதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவருக்கு இடம் தர வேண்டும் என்று ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் 3வது இடத்தில் பேட்டிங் இறங்க தொடங்கி உள்ளார்.

ஹர்பஜன் சிங் விமர்சனம்
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் ராகுல் திரிப்பாதியை முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். அதில், சென்னை தொடர்ச்சியாக தோல்வியடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை அணி மொத்தமாக பார்ம் இழந்தது போல தோன்றுகிறது.
சிஎஸ்கே வீரர்கள் தொடர்ச்சியாக பல தவறுகளை செய்கிறார்கள். முதலில், ராகுல் ராகுல் திரிபாதியை தொடக்க ஆட்டக்காரராக ஆடுகிறார்கள். இதுவே பெரிய தவறு. அவருக்கு ஓப்பனிங் வரவில்லை. கடந்த வருட ஓப்பனிங் அணி சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த வருடம் மோசமாக உள்ளது.
திரிபாதி தனது உடலை அதிகமாக ஆட்டுகிறார். ஆட்டிக்கொண்டே இருக்கிறார். உடல் நடுக்கம் போல ஆடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ரன்களை எடுக்கவில்லை. உடலை அடிக்கடி ஆட்டினால் எப்படி பந்தை கவனிக்க முடியும். மன்னிக்கவும், திரிபாதி மிகவும் நல்ல வீரர், மிகவும் கடின உழைப்பாளி. தற்போது அந்த ராகுலை பார்க்க முடியாது. அவர் மிக மோசமான பார்மில் இருக்கிறார். அவரை நம்பி சிஎஸ்கே பவர் பிளேவை வீணடிக்க கூடாது என்று ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
முக்கியமாக இவரை நீக்க முடியாத நிலையில் கேப்டன் ருத்துராஜ் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே கேப்டனாக ருத்துராஜ் விரும்பிய வீரர்களை எடுக்க முடியவில்லை. லெகசி என்பதற்காக அஸ்வினை எடுத்தனர். அஸ்வின் பவுலிங், பேட்டிங்கில் பார்மில் இல்லை.
அவரை எடுத்த 10 கோடி ரூபாய்க்கு இன்னும் சிறப்பாக சிஎஸ்கே வேறு வீரர்களை எடுத்து இருக்க முடியும். முக்கியமாக மிடில் ஆர்டரில் ஆட ஆல் ரவுண்டர் பவர் ஹிட்டரை எடுத்திருக்க முடியும். ஆனால் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அப்படி ஒரு அணியை சிஎஸ்கே டீம் வழங்கவில்லை. ருத்துராஜ் கெய்க்வாட் தோனியை எதுவும் செய்ய முடியாது. ஆனால் அணிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது தோனிதான். அவரை வைத்துக்கொள்ள வேண்டிய பிரஷரை சிஎஸ்கே அணிதான் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு கொடுக்கிறது.
அதேபோல் மிடில் ஆர்டரில் உள்ள வீரர்களை தூக்கவும், வைத்துக்கொள்ளவும் முடியாத அளவிற்கு மோசமான ஏலத்தை மேற்கொண்டு உள்ளது சிஎஸ்கே. இந்த அணியை வைத்து பழைய ஐபிஎல் போட்டிகளில் வேண்டுமானால் வெல்ல முடியும். ஆனால் இளம் படைகளை வைத்து இருக்கும் ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற அணிகளை இந்த சீசனில் எதிர்கொள்ள இந்த அணி போதுமானதாக இருக்காது.












Click it and Unblock the Notifications