இது தேவையா.. கார்த்திக் சர்மாவை அசால்ட்டாக விட்ட சிஎஸ்கே.. இப்போ அபராதமாக மாறிய ரூ.14.20 கோடி!
அபுதாபி: சிஎஸ்கே அணியால் ரூ.14.20 கோடி வாங்கப்பட்டுள்ள கார்த்திக் சர்மாவை, கடந்த சீசனிலேயே ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிஎஸ்கே அணி அந்த வாய்ப்பை தவறவிட, தற்போது அதற்கு அபராதம் கட்டுவது போல் மிகப்பெரிய தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் ( IPL Auction ) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரராக கார்த்திக் சர்மா இருந்தார். ஏனென்றால் கார்த்திக் சர்மா 7 அணிகளுக்காக டிரையல்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். அதிலும் ஆர்பிசி அணிக்காக டிரையல்ஸ் சென்ற போது, தினேஷ் கார்த்திக் அவருக்கு பல்வேறு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

குஜராத், பஞ்சாப் மற்றும் லக்னோ ஆகிய 3 அணிகள் மட்டுமே கார்த்திக் சர்மாவை டிரையல்ஸ்க்கு அழைக்கவில்லை. 19 வயதாகும் கார்த்திக் சர்மா, ராஜஸ்தான் அணிக்காக நம்பர் 4 பேட்டிங் வரிசையில் ஆடி வருகிறார். விஜய் ஹசாரே தொடரில் 8 இன்னிங்ஸில் ஆடிய 445 ரன்களை விளாசொஇனார். அதேபோல் சையத் முஷ்டாக் அலி தொடரில் 11 இன்னிங்ஸில் ஆடி 338 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் டி20 லீக் தொடரில் 10 இன்னிங்ஸில் ஆடி 457 ரன்களை விளாசியுள்ளார். எந்த வடிவிலான கிரிக்கெட்டாக இருந்தாலும் அதிகளவில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடக் கூடியவர். அதிலும் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான 45 பந்துகளில் 125 ரன்களை விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த கார்த்திக் சர்மா கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியுடன் பயணித்து வந்தார். கடந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமானதாக மாறியதால், மிட் சீசனிலேயே டிரையல்ஸ் வைத்தது. அந்த டிரையல்ஸ் மூலமாகவே உர்வில் படேல், டிவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. அப்போது கார்த்திக் சர்மாவும் அதிரடி சிக்சர்களை விளாசி இருந்தார்.
இதனால் கார்த்திக் சர்மாவை சிஎஸ்கே அணி மிட் சீசனில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் ஒப்பந்தம் செய்யலாம் என்று கருதி அசால்ட்டாக விட்டதன் விளைவால், இப்போது ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.14.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் 4வது விக்கெட் கீப்பராக கார்த்திக் சர்மா மாறி இருக்கிறார்.
ஏற்கனவே தோனி, சஞ்சு சாம்சன் மற்றும் உர்வில் படேல் ஆகியோர் இருக்கும் நிலையில், தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க சிஎஸ்கே அணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. கடந்த ஆண்டிலேயே ஒப்பந்தம் செய்திருந்தால், கார்த்திக் சர்மாவை ரூ.30 லட்சத்தில் தக்க வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications