லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பை.. மிஸ் செய்த சிஎஸ்கே.. டு பிளஸிஸை சீண்டாத சென்னை.. காரணமே இதுதான்!
சென்னை: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் இரண்டாவது நாளில் சிஎஸ்கே அணி இதுவரை யாரையும் ஏலம் கேட்கவில்லை. இன்று சென்னை அணியின் முன்னாள் லெஜண்ட் டு பிளஸிஸை ஏலம் எடுக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால் சிஎஸ்கே அணி அவரை கேட்கவே இல்லை. சிஎஸ்கே அணியில் இப்போது ஓப்பனிங் செய்ய கான்வாய், ருத்துராஜ், ராகுல் திரிபாதி உள்ளனர். அதோடு ரச்சீன் ரவீந்திரா ஓப்பனிங் இறங்க கூடியவர். இதனால் கூடுதலாக ஒருவரை எடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை.

அதோடு சிஎஸ்கே அணி சாகர், தேஷ்பாண்டே உள்ளிட்டோரை எடுக்க வேண்டும். அப்படி வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் டு பிளஸிஸுக்கு சிஎஸ்கே அணி பணம் செலுத்தவில்லை. இதையடுத்து டெல்லி அவரை எடுத்தது. அதேபோல் ஷரத்துல் தாக்கூரையும் சிஎஸ்கே இதே காரணத்திற்காக எடுக்கவில்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அணியை உருவாக்குவதும் இதே காரணம் ஆகும்.
நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:
மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி\
சிஎஸ்கே அணி நேற்று நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் சில சர்ப்ரைஸ் முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார்.
நேற்று எடுக்கப்பட்ட வீரர்கள்:
நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்
விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1 ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
2 மதீஷா பத்திரனா (13 கோடி)
3 சிவம் துபே (12 கோடி)
4 ரவீந்திர ஜடேஜா (18 கோடி)
5 எம்எஸ் தோனி (4 கோடி)
சிஎஸ்கே அணிக்கு மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. கேப்டன் தோனியால் மிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அஷ்வின் மீண்டும் தனது சொந்த மண்ணான சென்னைக்கு திரும்பி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு சென்று தற்போது கடும் போட்டிக்கு பிறகு அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி கைப்பற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications