கொரோனா காலத்தில்.. போர் அடிக்குதுன்னு கிரிக்கெட் ஆடியவர்! ரூ.4.8 கோடிக்கு மும்பை எடுத்த வீரர்! யார்?
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி முக்கியமான இளம் வீரர் ஒருவரை அணியில் எடுத்து உள்ளது. கடும் போட்டிக்கு பின்பாக முக்கியமான வீரர் ஒருவரை மும்பை அணி எடுத்துள்ளது.
மும்பை அணி நேற்று ஏலம் முழுக்க பெரிதாக யாரையும் எடுக்கவில்லை. பெரிய அளவில் நேற்று பர்ஸ் இல்லை. இதனால் யாரையும் எடுக்கவில்லை.

மற்ற அணிகளின் பர்ஸ் நேற்று குறைந்த பின்பும் மும்பை யாரையும் எடுக்கவில்லை . ஆனால் இன்று அடுத்தடுத்து சில வீரர்கள் மீது மும்பை ஆர்வம் காட்டியது.
அந்த வகையில் இன்று அல்லா முகமது கசன்ஃபர் என்ற 18 வயது ஆப்கானிஸ்தான் வீரர் 4.8 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். இவரை எடுக்க பல அணிகள் முயன்றும் கூட.. மும்பை அணி கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடி இவரை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் இருந்துதான் இவர் ஆப்கானிஸ்தான் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஆப்கானிஸ்தான் ஷ்பகீசா கிரிக்கெட் லீக்கில் மிஸ் ஐனாக் நைட்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஜூனியர் லீக்கில் ராவல்பிண்டி ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2024 இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், 2024 லங்கா பிரீமியர் லீக்கிற்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் பெரிதாக அப்போது வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 2020ல் கோவிட்-19 தொற்றுநோய்களின் போதுதான் போர் அடிக்கிறது என்பதற்காகக் கசன்ஃபர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆட தொடங்கியவர் இப்போது ஒரு ஆஃப்-ஸ்பின் பவுலர். அதேபோல் பேட்டிங்கும் நன்றாக செய்ய கூடியவர். முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் தவ்லத் அஹ்மத்சாய் மூலம் சுழற்பந்து வீச்சு பற்றி கற்றுக்கொண்டு.. அப்படியே ஸ்பின் பவுலிங் செய்ய தொடங்கினார்.
மும்பை அணியில் நல்ல ஸ்பின் பவுலர் இல்லை. அதோடு அந்த அணி நம்ப கூடிய நீண்ட காலத்திற்கு வர கூடிய வீரர் ஒருவர் தேவை என்பதால் இவரை எடுத்துள்ளது. இன்று மும்பை அணி தீபக் சாகரை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான ககிசோ ரபாடாவை குஜராத் அணி எளிதாக எடுத்துள்ளது. இவரை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது.
மும்பை அணி எப்போதும் பவுலர்களை அதிக விலைக்கு எடுக்கும். அந்த வகையில் இவரை எடுக்கவும் தீவிரமாக முயன்றது. அதன்படியே 9.5 கோடி ரூபாய் வரை இவரை எடுக்க மும்பை அணி முயன்றது. ஆனால் குஜராத் அணி விடாமல் துரத்தியது. 10.5 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி இவரை எடுக்க முயன்றது. அப்போது பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த விரும்புகிறதா என்று கேட்கப்பட்டது. பஞ்சாப் அணி இதை விரும்பவில்லை என்றதும்.. குஜராத் அணி 10.5 கோடி ரூபாய்க்கு அவரை தூக்கியது குறிப்பிடத்தக்கது.
நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:
மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி












Click it and Unblock the Notifications