போர் பூமியில் பிறந்த.. கிரிக்கெட் புயல்.. நல்ல வீடு கூட இல்லை! சிஎஸ்கே தூக்கிய நூர் அகமது யார்?
சென்னை: சிஎஸ்கே அணி நேற்று நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் சில சர்ப்ரைஸ் முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட வீரர்கள்:
நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்
விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1 ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
2 மதீஷா பத்திரனா (13 கோடி)
3 சிவம் துபே (12 கோடி)
4 ரவீந்திர ஜடேஜா (18 கோடி)
5 எம்எஸ் தோனி (4 கோடி)
நூர் அகமது யார்?: இவர் முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடியவர். குஜராத் அணியில் இவரின் இடது கை ஸ்பின் பவுலிங் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ரஷீத் கான் போல இவர் தற்போது ஆப்கானிஸ்தானின் சென்சேஷன். வறுமையான குடும்பத்தில் பெரிய வீடு வசதி கூட இல்லாமல் ரஷீத் போன்ற வீரர்களை பார்த்து கிரிக்கெட்டிற்கு வந்தவர் தற்போது அங்கே அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்.
இதன் காரணமாகவே நேற்று இவரை எடுக்க போட்டி அதிகம் இருந்தது. சிஎஸ்கே அணி இவரை 5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் ஆர்டிஎம் பயன்படுத்த முடிவு செய்தது. இதையடுத்து சிஎஸ்கே 10 கோடி ரூபாய்க்கு அவரின் விலையை உயர்த்தியது. இதையடுத்து குஜராத் அணி ஆர்டிஎம்மை பின்வாங்கியது. இதனால் சிஎஸ்கே அணி அவரை அணியில் எடுத்தது.
2019 ஆம் ஆண்டு அஹ்மத் ஷா அப்தாலி 4-நாள் போட்டியில் காபூல் பிராந்தியத்திற்காக 29 ஏப்ரல் 2019 அன்று அவர் தனது முதல்-தர போட்டியில் அறிமுகமானார்.[ 2019 ஆம் ஆண்டு ஷ்பஜீசா கிரிக்கெட் லீக்கில் மிஸ் ஐனாக் நைட்ஸ் அணிக்காக 8 அக்டோபர் 2019 அன்று அவர் தனது இருபது 20 போட்டியில் அறிமுகமானார். 2022ம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய அணிக்காக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிட்டிவ் விஷயங்கள்:
சென்னை சேப்பாக்கத்தில் பவுலிங் செய்ய நல்ல ஸ்பின் படை உள்ளது - அஸ்வின் - ஜடேஜா - ரச்சின் ரவீந்திரா படை உள்ளது
ஓப்பனிங் செய்ய டெவோன் கான்வே - ரச்சின் ரவீந்திரா - ருத்துராஜ் - ராகுல் திரிபாதி படை உள்ளது.
நெகட்டிவ் விஷயங்கள்:
பாஸ்ட் பவுலிங் செய்ய ஆள் குறைவாக உள்ளது. மதீஷா பத்திரனா சப்போர்ட்டாக் இன்னொருவர் வரலாம்.
பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இன்னொருவர் கூடுதலாக அணிக்கு வர வேண்டும். விஜய் சங்கர் இருந்தாலும் இன்னும் நம்பக்கூடிய பார்மில் உள்ள ஒருவர் வர வேண்டும்.












Click it and Unblock the Notifications