மீண்டும் மீண்டும்.. இப்படி பேசினால் என்ன அர்த்தம்? முகம் சுளித்த ஐபிஎல் ஓனர்ஸ்! கடுப்பாக்கிய ஏலதாரர்
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் ஏலம் விடுத்த பெண் வர்ணனையாளர் மல்லிகா சாகர் பல்வேறு டீம் தலைவர்களை கடுப்பாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் ஏலத்தின் இரண்டாம் நாள் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் ஏலம் விறுவிறுப்பாக நடந்தது.

இன்று அணிகளின் பர்சில் உள்ள மீதம் உள்ள தொகை:
மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி
இன்று 2025 ஐபிஎல் ஏலத்தில் ஏலம் விடுத்த பெண் வர்ணனையாளர் மல்லிகா சாகர் பல்வேறு டீம் தலைவர்களை கடுப்பாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றும் நேற்றும் ஏலம் முழுக்க
முக்கிய எச்சரிக்கை - ஃபேர் வார்னிங்
கடைசி எச்சரிக்கை,- லாஸ்ட் வார்னிங்
நான் விற்கிறேன். கடைசி எச்சரிக்கை!!
கடைசியாக ஒரு முறை மீண்டும் கேட்கிறேன் - லாஸ்ட் வார்னிங்
யாரும் ஏலம் எடுக்கிறீர்களா?
ஒன்று, இரண்டு... லாஸ்ட் வார்னிங்
புதிதாக யாரும் கேட்கிறீர்களா லாஸ்ட் வார்னிங்
என்று மீண்டும் மீண்டும் மல்லிகா சாகர் கூறினார். ஏலத்தை முடிக்காமல் லாஸ்ட் வார்னிங் என்று மீண்டும் மீண்டும் கூறினார்.
பொதுவாக ஏலம் விடுபவர்கள்.. ஹேமரை அடிக்கும் முன் இரண்டு மூன்று முறை கேட்பார்கள். ஆனால் இவர் விடாமல் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் கடைசி நேரத்தில் மீண்டும் சில அணிகள் ஏலத்தில் இணையும் நிலை கூட ஏற்பட்டது.
அதேபோல் சில அணிகள் ஏலம் கேட்டதை அவ்வப்போது இவர் பார்க்க தவறினார். சில சமயங்களில் பணத்தையும் சரியாக கணக்கிடாமல் தவறாக குறிப்பிட்டார்.
அவரின் செயல் ரசிகர்களை கடுப்பாக்கியது. அதே சமயம் அங்கே இருந்த அணி நிர்வாகிகளையும் கூட கடுப்பாக்கியது. அவரை மாற்ற வேண்டும்.. நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சிஎஸ்கே நிலவரம் என்ன? : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் இரண்டாவது நாளில் சிஎஸ்கே அணி சிறப்பாக காய் நகர்த்தி வருகிறது. ஆனால் இன்று சென்னை அணியின் முன்னாள் லெஜண்ட் டு பிளஸிஸை ஏலம் எடுக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால் சிஎஸ்கே அணி அவரை கேட்கவே இல்லை. சிஎஸ்கே அணியில் இப்போது ஓப்பனிங் செய்ய கான்வாய், ருத்துராஜ், ராகுல் திரிபாதி உள்ளனர். அதோடு ரச்சீன் ரவீந்திரா ஓப்பனிங் இறங்க கூடியவர். இதனால் கூடுதலாக ஒருவரை எடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை.
அதோடு சிஎஸ்கே அணி சாகர், தேஷ்பாண்டே உள்ளிட்டோரை எடுக்க வேண்டும். அப்படி வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் டு பிளஸிஸுக்கு சிஎஸ்கே அணி பணம் செலுத்தவில்லை. இதையடுத்து டெல்லி அவரை எடுத்தது. அதேபோல் ஷரத்துல் தாக்கூரையும் சிஎஸ்கே இதே காரணத்திற்காக எடுக்கவில்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அணியை உருவாக்குவதும் இதே காரணம் ஆகும்.எடுக்கவில்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அணியை உருவாக்குவதும் இதே காரணம் ஆகும்.
அதோடு சிஎஸ்கே அணி பவுலர்கள், ஆல் ரவுண்டர்கள் உள்ளிட்டோரை எடுக்க வேண்டும். அப்படி வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் டு பிளஸிஸுக்கு சிஎஸ்கே அணி பணம் செலுத்தவில்லை. இதையடுத்து டெல்லி அவரை எடுத்தது. அதேபோல் ஷரத்துல் தாக்கூரையும் சிஎஸ்கே இதே காரணத்திற்காக சிஎஸ்கே எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications