மாட்டிகின்னாரு ஒருத்தரு.. "பிஆர்" வைத்து ரோஹித் சர்மா பிரச்சாரம்.. கேப்டன்சியை தக்க வைக்க சதி?
சென்னை: ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் கேப்டன்சியை தக்க வைக்க சதி செய்துள்ளதாக நெட்டிசன்கள் புகார்களை அடுக்கி வருகின்றனர். அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய போஸ்டுகள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துள்ளது. இதற்கு முந்தைய பார்டர் கவாஸ்கர் தொடர்களில் வரிசையாக வென்ற இந்திய அணி ரோஹித் தலைமையில் மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி இந்த தொடரில் மிக மோசமாக அமைந்துள்ளது. அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தொடரில் இந்த முறை.. இந்தியா வென்றது ஒரே ஒரு மேட்ச். அது பும்ரா கேப்டனாக இருந்த மேட்ச். இதை தவிர மற்ற ஆட்டங்களில் வரிசையாக இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. ஒரு கேப்டனாக.. பேட்ஸ்மேனாக அடுத்தடுத்து மிக மோசமாக ரோஹித் சர்மா சொதப்பி விட்டார்.
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா எடுத்த எந்த முடிவும் சரியாக இல்லை. முக்கியமாக அவர் கேப்டனாக இருந்த 2 போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியது.
1. ரோஹித் சர்மாவின் பவுலிங் ரொட்டேட் செய்யும் விதம் மோசமாக இருக்கிறது.
2. அவர் பீல்டிங் நிற்க வைக்கும் விதம் கூட மிக மோசமாக உள்ளது.
3. ரஹானே மிக இளமையான அணியை வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.. பும்ரா இல்லாமல் ஆஸ்திரேலியாவை கோலி வீழ்த்தினார். ஆனால் நல்ல டீம் இருந்தும் கூட ரோஹித் சர்மா இந்தியாவை வழி நடத்த முடியாமல் திணறி வருகிறார்,
விலகல்:
இந்த நிலையில் தொடருக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறி உள்ளார். கடைசி போட்டியில் அவர் ஆடவில்லை. அதோடு அவரிடம் பிசிசிஐ கேபடன்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
நீங்கள் இனி கேப்டனாக நீடிக்க முடியாது. உங்களை தாண்டி வேறு ஒருவரை கேப்டனாக கொண்டு வர ஆலோசனை செய்து வருகிறோம். நீங்கள் கேப்டனாக இருக்க முடியாது என்று பிசிசிஐ அவரிடம் கூறியதாக தெரிகிறது.
தற்போது டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக ரோஹித் சர்மாவிற்கு பதில் பும்ரா உள்ளார். இந்த நிலையில் பும்ரா தொடர்ந்து கேப்டன்சி செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பும்ரா பிட்னஸ் சொதப்பும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கில் அல்லது பண்ட் கூட கேப்டன் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
ரோஹித் சர்மா பிஆர்:
இப்படிப்பட்ட நிலையில்தான் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் கேப்டன்சியை தக்க வைக்க சதி செய்துள்ளதாக நெட்டிசன்கள் புகார்களை அடுக்கி வருகின்றனர். அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய போஸ்டுகள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
அதன்படி பிரபல ஐடிக்களிடம் ரோஹித் சர்மாவின் மனைவி மற்றும் மேனேஜர் சஜ்தே சர்மா பணம் கொடுத்து ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்ய சொன்னதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக வித்யா பாலனின் டிவிட்டர் ஐடி பொதுவாக பிஆர் வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
அதில் கூட ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் வந்துள்ளது. பொதுவாக ஒரு வீரரை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா தியாகி.. அவர் இல்லை என்றால் இந்திய அணி இல்லை என்ற தொனியில் வரக்கூடிய போஸ்டுகள் இது உண்மையில் வரக்கூடிய போஸ்ட்டா இல்லை பிஆர் வேலையா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications