ஹர்திக் பாண்டியாவின் ஆணவம்.. சச்சின் லாபி.. ரோஹித் சர்மாவிற்கு மும்பையில் நடக்கும் அநீதி! பின்னணி
மும்பை: மும்பை அணியில் நடைபெறும் மோதலுக்கு பின் வேறு ஒரு முக்கிய நபரின் ஈகோவும் காரணமாக இருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன் பேமிலி என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி.. உண்மையில் ஒரு பேமிலி இல்லை அது பல பேமிலி என்பது நேற்று நடந்த மேட்சில் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. மாயாண்டி குடும்பத்தாராக ஒன்றாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாண்டியா மீண்டும் வந்ததில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

ரோஹித் சர்மாவை பவுண்டரி அருகே பீல்டிங் நிற்க வைத்தது, இங்கும் அங்கும் அவரை அலைய விட்டது, ரோஹித் சர்மா, பும்ரா இருவரும் பாண்டியாவின் பீல்டிங் செட்டப்பை விமர்சனம் செய்தது, மேட்சுக்கு பின் ஹர்திக் பாண்டியாவை அழைத்து ரோஹித் சர்மா கோபமாக அறிவுரை வழங்கியது ஒரே மேட்சில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த எல்லா பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அதற்கு முன்பே கேப்டன்சி மாற்றம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கூட ஹர்திக் பாண்டியா பதில் அளிக்காமல் போனது பிரச்னையை பெரிதாக்கியது.
பிரச்சனை எப்போது தொடங்கியது; மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரான்ஸ்பரில் வாங்கியதில் இருந்துதான் பிரச்சனை தொடங்கியது. ஒரு சீசனில் பைனலில் சாம்பியன்ஸ், அடுத்த சீசனிலேயே பைனல்ஸ் ரன்னர் அப் என்று குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிரூபித்த காரணத்தால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய் கொடுத்து அணியில் எடுத்தது.
15 கோடி ரூபாய் + விளம்பர தொகை + கூடுதலாக இன்னும் பல கோடிகளை கொடுத்து ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் எடுத்தது. இதில் ஹர்திக் பாண்டியா இரண்டு சீசன்கள் கேப்டனாக நிரூபித்த காரணத்தால்.. வெறும் வீரராக அணிக்குள் திரும்ப தயாராக இல்லை. கேப்டனாக மட்டுமே அணிக்குள் வருவேன் என்று அவர் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி.. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் ரோஹித் சர்மாவை கேப்டனாக வைத்திருக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் வேறு சில காரணங்களுக்காக ரோஹித் சர்மாவை நீக்கலாம் என்ற திட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. பும்ரா அல்லது சூர்யா குமார் யாதவை கேப்டனாக களமிறக்கும் திட்டமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்துள்ளது.
சச்சின்: இப்படிப்பட்ட நிலையில்தான் அணிக்குள் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மாவை இப்படி நீக்கும் திட்டத்தில் இருக்க 3 காரணங்கள் இருந்துள்ளன. ஒன்று அவரின் வயது. இன்னொன்று எதிர்காலத்திற்காக அணியை தயார் செய்ய இளம் கேப்டன் வேண்டும். மூன்றாவதாக சச்சின் கொடுத்த பிரஷர் காரணம் என்கிறார்கள்.
ரோஹித் சர்மாவை நீக்க சச்சின் பெரிய அளவில் லாபி செய்ததாக கூறப்படுகிறது . அர்ஜுன் டெண்டுல்கரை ரோஹித் சர்மா நடத்திய விதம் பிடிக்காமல் சச்சினும் ரோஹித் சர்மாவிற்கு எதிராக பெரிய அளவில் லாபி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது கூட சமூக வலைத்தளங்களில் ரோஹித் சர்மா ரசிகர்கள் பலரும் சச்சினின் லாபிதான் ஹர்திக் பாண்டியா உள்ளே வர காரணம்.
பும்ரா, சூர்ய குமார் யாதவ் இருந்தால் அவர்கள் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதால் ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டு வர லாபி செய்ததே சச்சின்தான் என்றும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்காதது +அவரை சரியாக நடத்தாது இரண்டும்தான் இந்த ரோஹித் சர்மாவிற்கு எதிராக திரும்பியதாக நெட்டிசன்கள் புகார் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications