காவ்யா மாறன் மட்டுமல்ல.. அடுத்து டெல்லி அணிக்கு காத்திருக்கும் ஆப்பு.. பாகிஸ்தான் வீரர்களால் சர்ச்சை
மும்பை: இங்கிலாந்தில் நடந்து வரும் ஹன்ட்ரட் லீக் தொடரில் காவ்யா மாறனுக்கு சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் சன்ரைசர்ஸ் அணியை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது டெல்லி அணி முதலீடு செய்துள்ள சதர்ன் பிரேவ் அணியும் பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் தி ஹன்ட்ரட் லீக் தொடரை இந்திய ரசிகர்களிடையே பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்திருக்கின்றனர். சன்ரைசர்ஸ் லீட்ஸ், மான்செஸ்டர் சூப்பர் ஜெயிண்ட்ஸ், எம்ஐ கண்டன், டெல்லி அணி உரிமையாளர்கள் சதர்ன் பிரேவ் அணி மீதும் முதலீடு செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பாக இந்த தொடருக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னரான அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் விளையாடவும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு லீக்குகளில் விளையாடி வருகின்றனர். தற்போது இந்திய உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ள அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஒப்ப்ந்தம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு இங்கிலாந்து வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் கிரிக்கெட் வீரர்களின் தேர்வு திறமை மீதானதாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
ஆனால் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்த பின், அந்த அணியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. அதேபோல் சன்ரைசர்ஸ் அணியையும், காவ்யா மாறனையும் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களை வாங்கும் திட்டம் தங்களிடமும் இருப்பதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமந்த் பதானி தெரிவித்துள்ளார்.
இதனால் டெல்லி அணியின் உரிமையாளர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெல்லி அணி மீதும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால் டெல்லி வட்டாரத்தில் புதிய சர்ச்சை உருவாகி இருக்கிறது. இதனால் ஐசிசி தலையிட்டு உடனடியாக சிக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications