ரோஹித் ஏன் இப்படி பண்ணுனாரு.. இங்குதான் சொதப்பல்.. அடித்து விளாசிய கிரிஸ் ஸ்ரீகாந்த்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.

இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

Kris Srikanth thrashes team India for the loss against Australia in 2023 World Cup Finals?

பவுலிங்கில் சொதப்பல்: ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தும் கூட இந்திய அணி தற்போது மோசமாக திணறிக்கொண்டு உள்ளது. முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார்.

பார்ட்னர்ஷிப்; இதை தொடர்ந்து மேட்சில் தொடர்ந்து ஹெட் மற்றும் லபுசேன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகின்றனர். இரண்டு பேரும் 160 ரன்களை எடுத்து உள்ளனர். இதில் ஹெட் 137 ரன்கள் அடித்தார். இதனால் ஆட்டமே மாறியது. இவரின் ஆட்டம்தான் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.

கிரிஸ் ஸ்ரீகாந்த் விமர்சனம்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்விக்கு இன்று கிரிஸ் ஸ்ரீகாந்த் முக்கியமான சில காரணங்களை கூறினார். இந்திய அணி பவுலிங் செய்யும் போதே கிரிஸ் ஸ்ரீகாந்த் தோல்விக்கான காரணங்களை அடுக்கினார்.

Kris Srikanth thrashes team India for the loss against Australia in 2023 World Cup Finals?

1. ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்காமல் ஆடுகிறார். லெப்ட் ஹேண்ட் பவுலர் வரும் போது ஸ்லிப் முக்கியம். ஆனால் அதை வைக்கவில்லை.

2. சிராஜுக்கு ஓவர் கொடுத்த மிடில் ஓவர்களில் ஜடேஜாவை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ரோஹித் அதை செய்யவில்லை. இது பெரிய தவறு.

3. ஆட்டத்தை 40 ஓவருக்கு மேல் கொண்டு செல்ல ரோஹித் நினைக்க கூடாது. 40 ஓவருக்கு முன் முடிக்க வேண்டும். ஆனால் ரோஹித் இதை செய்யவில்லை.

4. அணியில் ரோஹித் சர்மா, சிராஜை எடுத்திருக்கவே கூடாது. முகமது சிராஜ் ஆடியதற்கு பதில் அஸ்வின் இறங்கி இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த உலகக் கோப்பை பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. ஆஸ்திரேலியா அணி இதன் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+