அரங்கம் அதிரட்டுமே.! வான்கடேவில் மையம் கொள்ளும் GOATகள்! கிரிக்கெட் களத்தில் மெஸ்ஸி.. கூடவே தோனி, கோலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக அறியப்படும் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வரவிருக்கிறார். 3 நாள் பயணத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாராம். குறிப்பாக மும்பையில் சச்சின், தோனி, கோலி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் அவர் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

உலகக் கோப்பை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியா வரவுள்ளார். வரும் டிசம்பர் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் அவர் இந்தியா வருகிறார்.. அதன் ஒரு பகுதியாக அவர் மும்பை வரவுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் அவரது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த அறிவிப்பு மும்பை கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lionel Messi to Take on Virat Kohli and MS Dhoni in Cricket Mumbai and might visit Kerala too

கிரிக்கெட் போட்டி

குறிப்பாக டிசம்பர் 14ம் தேதி மெஸ்ஸி மும்பையில் உள்ள புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான வான்கடேவுக்கு வரவுள்ளார். இது தொடர்பாக மும்மை கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகையில், "அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டவுடன் முழு அட்டவணையை வெளியிடப்படும்" என்றார்.

மேலும், எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் வரும் டிசம்பர் 14ம் தேதி நடக்கும் கிரிக்கெட் போட்டியில் மெஸ்ஸி, விராட் கோலி மற்றும் தோனி உள்ளிட்டோர் பங்கேற்கலாம். மெஸ்ஸி பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளிலும் ஏழு பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தை உறுதி செய்ய இப்போது தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

யாரெல்லாம் விளையாடுவார்கள்

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக அறியப்படும் மெஸ்ஸி, கிரிக்கெட் விளையாடுவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போட்டியில் கோலி, தோனி மட்டுமின்றி சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களையும் பங்கேற்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பயண திட்டம்

மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் வெனிசுலாவுக்கு எதிராக நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார். தற்போதைய பயணத்தில், அவர் டிசம்பர் 13 முதல் 15 வரை மூன்று இந்திய நகரங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

கொல்கத்தா

முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அதில் மெஸ்ஸியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கௌரவிக்கப்படுவார். அங்கு அவர் குழந்தைகளுக்கான கால்பந்து ஒர்க்ஷாப்பை நடத்துகிறார். மெஸ்ஸியை கவுரவப்படுத்தும் வகையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 'கோட் கப்' (GOAT CUP) என்ற ஏழு பேர் கொண்ட கால்பந்து போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அக்டோபரில் மெஸ்ஸி கேரளாவில் ஒரு நட்பு ரீதியான போட்டிக்காக வருவார் என்று அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்தார். இருப்பினும் கேரளாவுக்கு மெஸ்ஸி செல்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. 38 வயதான மெஸ்ஸி தற்போது மேஜர் லீக் சாக்கர் தொடரில் கிளப் இன்டர் மியாமியில் விளையாடி வருகிறார். 2022ல் அர்ஜெண்டினாவை உலகக் கோப்பைக்கு வழிநடத்திய அவர், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள FIFA உலகக் கோப்பையிலும் விளையாட இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+