பெண்களிடம் தவறாக பேசிய சாஹல்.. பழைய குட்டு எல்லாம் அம்பலம் ஆகுதே! மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு!
சென்னை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் பழைய போஸ்டுகள் கவனம் பெற்று வருகின்றன.
யுஸ்வேந்திர சாஹல் எக்ஸ் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் செய்த, பின்னர் டெலிட் செய்யப்பட்ட பழைய போஸ்டுகள் டிரெண்டாகி வருகின்றன. பல பெண்களை இவர் டேட்டிங்கிற்கு அழைத்த போஸ்டுகள் மீண்டும் உலா வருகின்றன.

அதேபோல் நிறைய பெண்களுக்கு இவர் தனியாக டிஎம் மெசேஜ் செய்துள்ளார். அதில் நீண்ட சாட்களை செய்துள்ளார். அதிலும் பெண்களை டேட்டிங் அழைத்துள்ளார். இதெல்லாம் அவர் கிரிக்கெட்டில் பிரபலம் அடையும் முன் செய்த சாட்கள் ஆகும்.
அவரின் இந்த செயல் தற்போது விவாகரத்து செய்திகளுக்கு இடையே தீவிரமாக இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது.
விவாகரத்து:
இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள், விவாகரத்து தொடர்பான செய்திகள் கவனம் பெற்று வருகின்றன. அதேபோல் விவாகரத்து ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளும் கவனம் பெற்று வருகின்றன. தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவகாரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.
இதில் தனஸ்ரீ மீது சில கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. அவரை தூக்கி சுற்றுவது.. நண்பர்கள் முன் அவமதிப்பது போல பேசுவது என்று தனஸ்ரீ மிக மோசமாக நடந்து கொண்டார்.
தனஸ்ரீ சாஹலை பெரிதாக மதிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல சாஹல் வசீகரமாக இல்லை என்று தனஸ்ரீ நினைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனஸ்ரீ - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ அவரின் கணவர் சாஹல் உடல் இருந்தது எல்லாம் பணத்திற்காக மட்டுமே என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
இணையத்தில் வைக்கப்படும் இந்த புகார்களுக்கு இதுவரை தனஸ்ரீ தரப்பில் இருந்து பதிலோ மறுப்போ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் யுஸ்வேந்திர சாஹலின் பழைய போஸ்டுகள் கவனம் பெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications